உலகம்

தென்கொரியாவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து – மூவர் பலி!

  • May 26, 2026
  • 0 Comments

தென் கொரியத் தலைநகரான சியோலில் பழமையான மேம்பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 03 பேர் உயரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழமைவாய்ந்த சியோசோமுன் (Seosomun)  மேம்பாலத்தை இடிப்பதற்காக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவசரகாலப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.