ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அவசர நிலை பிரகடனம்
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படையினரின் எல்லை தாண்டிய தாக்குதல் இரண்டாவது நாளாக தொடர்வதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பிராந்திய ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ், “எதிரி படைகள் பிராந்தியத்திற்குள் வருவதால் ஏற்படும் விளைவுகளை அகற்ற” இந்த நடவடிக்கை அவசியம் என தெரிவித்தார்.
எல்லைப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மற்ற நகரங்களிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக,எல்லையில் இருந்து 10 கிமீ (ஆறு மைல்) தொலைவில் உள்ள சுட்ஜா நகருக்கு அருகே நூற்றுக்கணக்கான துருப்புக்கள் எல்லையைத் தாண்டியதாக மாஸ்கோ கூறியதை அடுத்து உக்ரைன் ஒரு “பெரிய ஆத்திரமூட்டலை” தொடங்குவதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சாட்டினார்.