ஐரோப்பா

ஆஸ்திரியாவில் மகனை கூண்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய தாய்!

ஆஸ்திரியாவில் 12 வயது மகனைத் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 32 வயதுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகனைச் சிறிய நாய்க் கூண்டில் பூட்டிவைத்து, பூஜ்ஜியத்திற்கும் குறைவான தட்பநிலைக்கு உட்படுத்தியதாக நம்பப்படுகிறது.

அந்தப் பெண் தற்போது தடுப்புக் காவலில் இருக்கிறார். அவரது செயல் குறித்து பொலிஸாரிடம் சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் வேறொரு வீட்டில் வசிக்கிறார். அந்தப் பெண் தம் மகன் மீது ஒரு நாளில் பலமுறை குளிர்ந்த நீரை ஊற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக இருக்கும்போது அவர் சன்னல்களைப் பல மணி நேரத்துக்குத் திறந்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் விளைவாகச் சிறுவனின் உடல் வெப்பநிலை 26.8 பாகை செல்சியசுக்குக் குறைந்தது. மேலும் அவனைப் பலமுறை அடித்து, உணவு கொடுக்காமல் கட்டிப்போட்டு, நாய்க்கூண்டில் பூட்டிவைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவனைச் சமூகப் பணியாளர் மீட்ட போது அவன் நினைவற்ற நிலையில் இருந்தான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை மேம்பட்டு வருகிறது.

ஆனால் மனத்தளவில் அவன் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்