இலங்கை

இலங்கையர்களுக்கு கனடாவில் தொழில் ஆசைக்காட்டில் ஏமாற்றிய கும்பல் – பல கோடி மோசடி

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர், கனடாவில் தொழில் பெற்றுக்கொள்வதற்காக வத்தளை குடாஏதண்ட வீதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு பணம் வழங்கியுள்ளார்.

பின்னர் தொழிலை பெற்றுக்கொடுக்க முடியாமல் போனதாக குறித்த பெண்ணால் தெரிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணை அதிகாரிகளால் 37 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரையில் குறித்த பெண்ணுக்கு எதிராக 16 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், முறைப்பாடுகளின் பிரகாரம் அவர் மோசடி செய்த பணத்தின் தொகை 6 கோடி ரூபாவுக்கும் அதிகமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கி உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள் மற்றும் உயர் தொழில்களில் உள்ளவர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களிடம் குறித்த பெண் மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி கனேடிய தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவதாகக் கூறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்