இந்தியா

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை… 20 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு!

கர்நாடகாவில் 16 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டு வயது குழந்தை 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாவட்டத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, சந்திரப்பா என்பவர் நிலத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. சுமார் 16 அடி ஆழத்திற்கு தோண்டிய போது, கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த குழியை மூடாமல் விட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6:30 மணியளவில் அந்த வழியே சென்ற ஒருவர் ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தை ஒன்று அழுகும் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்து உள்ளே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது குழந்தை ஒன்று உள்ளே இருப்பதை அறிந்தவுடன் அவர் உடனடியாக அருகாமையில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

16 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை 20 அடி ஆழ கிணறு தோண்டி மீட்புப்படையினர் மீட்டனர்

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். அப்போது தான், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சந்திரப்பாவின் 2 வயது பேரன் சாத்விக் என்பது தெரியவந்தது.

குழந்தை 16 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரியவந்த நிலையில், தலைக்குப்புற விழுந்து இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக குழந்தைக்கு ஆக்ஸிஜன் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதோடு, அருகில் 20 அடி ஆழத்திற்கு மற்றொரு கிணறு தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. சுமார் 20 மணி நேரமாக மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணி அளவில் சிறுவன் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சைக்காக தற்போது சிறுவன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே