பொழுதுபோக்கு

நயன்தாராவின் ‘TEST’ படப்பிடிப்பு நிறைவு… இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?

நடிகை நயன்தாரா நடிப்பில், சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 75 வது திரைப்படமான ‘அன்னபூரணி’ மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், சென்னை மழை வெள்ளத்தின் காரணமாக ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாமல் போனது.

இதை தொடந்து நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் உள்ளதாக கூறி ஓடிடி தளத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது, மண்ணாங்கட்டி மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில், ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிகர் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின், ஆகியோர் நடித்துள்ளனர். குறிப்பாக மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகிய மூவரும் ஆயுத எழுத்து படத்திற்கு பின்னர் மீண்டும், ‘டெஸ்ட்’ படத்தில் ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர்.

சசிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இன்றுடன் முடிவடைந்து விட்டதாகவும்… இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், உள்ளிட்ட மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content