தளபதி விஜய்யின் ‘லியோ’ 2 பாகங்களாக வருகின்றதா?
லோகேஷ் கனகராஜ் தற்போது காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்திற்கான சில பேட்ச் ஒர்க் காட்சிகளை படமாக்குகிறார்.
இந்த நிலையில் லியோ படத்தின் இரண்டாம் பாகம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கிளைமாக்ஸ் இரண்டாம் பாகமாக வெளிவர இருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு பெரிய சலசலப்பு கிளம்பியுள்ளது.
தற்போது ‘கைதி 2’, ‘சந்திரமுகி 2’, ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ மற்றும் ‘கேப்டன் மில்லர் 2’ போன்ற பல படங்கள் அடுத்தடுத்து வருகின்றன. இப்போது அந்த வரிசையில் முதல் முறையாக விஜய்யும் இணையவுள்ளதாக தெரிகிறது.
எனினும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ மற்றும் அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 69’ ஆகிய படங்களில் விஜய் கமிட்டாகி இருப்பதால் எப்படியும் ‘லியோ 2’ எடுப்பதற்கு குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகும்.
அதேபோல் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘தலைவர் 171’ படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் ‘கைதி 2’ மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்குவதால் என்பதால் அவரது கைகளும் நிறைந்துள்ளன.
அவரது இனி வரும் படங்கள் அனைத்தும் LCU-வின் கீழ் வருவதால், கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் வரலாம் என நம்பப்படுகின்றது…