பாங்காக்கில் பாரிய தீவிபத்து – 27 பேர் பலி, 22 பேர் கவலைக்கிடம்
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 22 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாங்காக்கின் சாட்டுசாக் மாவட்டத்தில் உள்ள மதுபான விடுதியொன்றில் நேற்று இரவு 11.57 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாங்காக் பெருநகர நிர்வாகத்தின் பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்புத் துறையின் இயக்குநர் சூரியச்சாய் ரவிவான் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் பணியாளர்கள் வருவதற்குள், அந்த இடத்தின் மேடையின் முன்புறத்தில் தீப்பற்றியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




