புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்த கலகத் தடுப்பு பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம்
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் மீது நீர்தாரைப் பிரயோகத்தை மேற்கொள்ள பிரான்ஸ் கலகத்தடுப்பு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுடன் செய்துக்கொண்ட 660 மில்லியன் பவுண்ட்ஸ் ஒப்பந்தத்தின்படி இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பிற்கு அமைய Compagnies Républicaines de Sécurité (CRS) அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸின் கலவரத் தடுப்பு அதிகாரிகள், தங்களின் பொது ஒழுங்கு அதிகாரங்களின் ஒரு பகுதியாக நீர்த்தாரை பீரங்கிகள், CS வாயு மற்றும் தடியடிகளைப் பயன்படுத்தக் கோர சுதந்திரம் பெற்றுள்ளனர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட நீர்த்தாரை பீரங்கிகளை, கலவரத் தடுப்புக் காவல்துறையினர் பயன்படுத்த அனுமதிக்கும் முடிவு ‘அருவருப்பானது’ என அகதிகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களை நிலைதடுமாறச் செய்யும் அளவுக்கு சக்திவாய்ந்த, அதிவேக நீரோட்டத்தைப் பாய்ச்சக்கூடிய நீர்த்தாரை பீரங்கிகளின் பயன்பாட்டை பிரித்தானியா தடை செய்துள்ளது.
இருப்பினும் வடக்கு அயர்லாந்தில் பயன்படுத்தப்படலாம், மேலும் கடந்த வாரம் குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை அடக்குவதற்காகவும் இம்முறை பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தகக்து.





