மோசடிகளை நுட்பமாக்கும் செயற்கை நுண்ணறிவு – 900 மில்லியன் டொலர்கள் இழப்பு!!
அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் இடம்பெறும் மோசடிகளால் மக்கள் 900 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் FBI-யின் இணையக் குற்ற முறைப்பாட்டு மையத்திற்கு 22,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மோசடிகளை மேலும் நுட்பமாக்கி வருகிறது. குறிப்பாக மோசடியாளர்கள் ஏமாற்று வேலைகளை செய்வதற்கான திறனை வலுப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போலி ஆட்கடத்தல் மற்றும் காதல் மோசடி வழக்குகள் பெறுகி வருவதாகவும், இதற்காக மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளம் பருவத்தினரும் இளைஞர்களும் அதிகளவில் குறிவைக்கப்படுகின்றனர். 2024-ஆம் ஆண்டிலிருந்து 20 வயதுக்குட்பட்ட தனிநபர்களிடமிருந்து FBI-க்கு வரும் முறைப்பாடுகள் 74 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





