பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்கும் சீனா – முக்கிய தருணத்தில் தைவான் குற்றச்சாட்டு!
பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்குவதாக சீனா மீது தைவான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க – சீன பிரதிநிதிகளின் இன்றைய சந்திப்பில் தைவான் குறித்த பேச்சுவார்த்தை முக்கிய இடத்தை பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தைவான் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் மிஷேல் லீ, சீனாவின் இராணுவ அச்சுறுத்தல் பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்குவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
“தேசிய பாதுகாப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவதும், பயனுள்ள கூட்டுத் தடுப்பு நடவடிக்கைகளுமே பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான மிக முக்கியமான காரணியாகும்.”
“சர்வாதிகார விரிவாக்கத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களை” நிர்வகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவை என்று அவர் கூறினார்.
இதேவேளை இந்நிலையில் பெய்ஜிங் இந்த விவகாரத்தை “மிக முக்கியமான பிரச்சினை” என்று விவரித்ததுடன், இது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதலுக்கு ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





