உலகம்

சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு!!

சிகாகோவில்  மருத்துவமனை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிகாகோவில் உள்ள எண்டெவர் ஹெல்த் ஸ்வீடிஷ் ( Endeavor Health Swedish) மருத்துவமனையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் ஒருவரைக் கண்காணிப்பிற்காக அழைத்துச் சென்றபோது, ​​சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிகாகோ மேயர் பிராண்டன் ஜான்சன் (Brandon Johnson)  இந்த நிகழ்வை ஒரு “பேரழிவு” என்று வர்ணித்ததுடன், காவல்துறை அதிகாரிகளுக்கு மனநல ஆதரவு சேவைகள் வழங்கப்பட்டு வருவதையும் உறுதிப்படுத்தினார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!