ஐரோப்பா

ஆப்கானியர்களை நாடு கடத்தும் தீர்மானம் : இழுபறியில் பேச்சுவார்த்தை!

ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10 இலட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த  தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்காத போதிலும், சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், நாடு கடத்துவதை அதிகரிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், ஐரோப்பிய ஆணையம் தலிபான் அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புரூனர் , நிலைமையை மேம்படுத்துவதற்காக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தலிபான் அதிகாரிகள் பெல்ஜியத்திற்கு வருகை தருவதற்கான விசாக்கள் இன்னும் வழங்கப்படவில்லை எனவும், அவர்களை  சந்திப்பிற்கான திகதியும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

2021இல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஐரோப்பிய நாடுகள் அங்குள்ள தங்கள் தூதரகத்தை மூடி எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்