சுவிஸ் செல்ல இருந்த விமானத்தில் பதற்றம் – பயணிகள் வெளியேற்றம்!
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிஸ் செல்ல இருந்த விமானம் ஒன்று கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஏர்பஸ் A330 ரக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்படும் அபாயம் இருப்பது இறுதி நிமிடத்தில் கண்டறியப்பட்டதுடன், விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விரைவான அவசரகால வெளியேற்றம் நடைபெற்றது. பயணிகள் காற்றடைக்கப்பட்ட சரிவுப்பாதைகளைப் பயன்படுத்தி, வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
வெளியேற்றத்தின் போது ஆறு பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மற்றவர்கள் பாதுகாப்பாக முனையத்திற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




