இந்தியா செய்தி

‘கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்த நாள் இன்று’: மோடி விடுத்துள்ள அறிவிப்பு!

தீவிரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்து இன்றோடு ஓராண்டு ஆகியுள்ளது.

தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் டிஆர்எஃப் பிரிவு இந்த தாக்குதலை மேற்கொண்டது.

இந்த தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மஹாதேவ் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தது.

மேலும், பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. தற்போது அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி, பதிவிட்டுள்ளார்.

கடந்தாண்டு இதே நாளில், பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.

அவர்களை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த துயரத்தில் ஒரு தேசமாக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

எந்த வடிவத்திலான தீவிரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. தீவிரவாதிகளின் இழிவான சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி