ஜப்பானை தாக்கிய சுனாமி!
ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவாத்தே (Iwate) மாகாணத்தில் அமைந்துள்ள குஜி (Kuji) துறைமுகத்தில் 80 சென்டிமீட்டர் உயரத்திலும், மியாகோ (Miyako ) துறைமுகத்தில் 40 சென்டிமீட்டர் உயரத்திலும் சுனாமி அலைகள் தாக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹொக்கைடோ (Hokkaido), ஆமோரி (Aomori) மற்றும் இவாத்தே (Iwate) மாகாணங்களின் சில பகுதிகளுக்கு 3 மீட்டர் உயரம் வரையிலான சுனாமிகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பேரிடர் மீட்புப் பணிகளை நிர்வகிப்பதற்காக பிரதமர் டகாயிச்சியால் ஒரு அவசரகாலப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு





