உலகம்

ஈரானுடனான போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா!

ஈரானுடனான போர் பதற்றங்கள் மற்றும் அமெரிக்கா, தென் கொரியாவுடனான சாத்தியமான சந்திப்புகள் குறித்த பேச்சுக்களுக்கு மத்தியில், வட கொரியா இன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஏழாவது முறையாக  ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது.

தனது தற்காப்புத் திறன்களை வெளிப்படுத்துவதோடு, சர்வதேச அளவில் செல்வாக்கைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டே மேற்படி ஏவுகணைகளை ஏவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரானைப் போலல்லாமல், எங்களிடம் தற்காப்புத் திறன்கள் உள்ளன என்பதைக் காட்டுவதற்கான ஒரு வழியாக இந்த ஏவுகணை ஏவுதல்கள் இருக்கலாம்,” என்று தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் கிம் கி-ஜங் (Kim Ki-jung) கூறினார்.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்பு, வட கொரியா முன்கூட்டியே அழுத்தம் கொடுத்து, தனது பலத்தைக் காட்டுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!