போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டிருக்கும்!
லெபனானில் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் காலம் முழுவதும், ஹோர்முஸ் ஜலசந்தி அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், “ஈரான் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்பட்டு, முழுமையான போக்குவரத்திற்குத் தயாராக உள்ளது என்று ஈரான் இப்போது அறிவித்துள்ளது. நன்றி!” என்று கூறினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் இந்த ஜலசந்தியை முன்னர் மூடியிருந்தது. இதற்கு பதிலடியாக ட்ரம்ப் ஈரானின் எண்ணெய் துறைமுகங்களை முற்றுகையிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





