பங்களாதேஷில் பேருந்து விபத்து : 16 பேர் பலி
பங்களாதேஷில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மேலும் பலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.






