ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 09 சதவீதத்தால் உயர்வு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெயின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை நேற்று (6) முதல் 9% அதிகரித்து தற்போது 93 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.
2 ஆண்டுகளில் எண்ணெய் விலை அதிகரித்திருப்பது இதுவே முதல் முறையாகும். கடைசியாக கச்சா எண்ணெய் விலை 2023 செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் அதிகரித்திருந்தது.
தற்போது மத்தியக் கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் எண்ணெய் உயர்வுக்கு பங்களித்துள்ளன. அதேநேரம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலர்களை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





