ஈரான் போர் முடிவில்லாமல் தொடருமா? நெதன்யாகு பதில்!
வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, “நாம் முடிவில்லாப் போரை நடத்தப் போவதில்லை” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) கூறியுள்ளார்.
Fox Newsஇற்கு அளித்த செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும்” என்றும், “இறுதியில் அரசாங்கத்தை மாற்றுவது ஈரான் மக்களின் பொறுப்பாகும்” என்றும் கூறினார்.
“அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குகின்றன”. இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றும் அறிவித்துள்ளார்.
“பின்னர் அவர்கள் அமெரிக்காவை குறிவைக்கலாம், அவர்கள் அமெரிக்காவை அச்சுறுத்தலாம், அவர்கள் நம்மை அச்சுறுத்தலாம், இடையில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தலாம். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது.”
“வலிமையின் மூலம் அமைதியை” நாடுவேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





