உலகம்

போரால் உலகப் பொருளாதாரமும் பாதிப்பு: எகிறியது எரிவாயு விலை!

 

மத்திய கிழக்கை போர் மேகம் சூழ்ந்து குண்டும் மழை பொழியும் நிலையில், சர்வதேச சந்தையில் எரிவாயு விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

கத்தார் உள்ளிட்ட நாடுகளின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகளால் எரிசக்தி பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கத்தார் உலகின் முக்கிய எரிவாயு ஏற்றுமதியாளராக திகழ்வதால் அங்கு ஏற்படும் வணிகத் தடங்கல்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கக்கூடும்.

ஐரோப்பாவில் குளிர் காலம் முடிவுக்கு வந்திருந்தாலும் எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ளதால் கோடை காலத்தில் சேமிப்பை நிரப்புவதில் சிக்கல் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் பிரிட்டன் போன்ற நாடுகளில் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.

அதேவேளை, மத்திய கிழக்கு போர் சூழ்நிலையால் எரிபொருள் விலையும் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்