இலங்கை செய்தி

எரிபொருள் குறித்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு விசேட அறிவிப்பு

  • March 5, 2026
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கிடைக்க பெறுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார் இன்று(05-03-2026) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். குறிப்பாக மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய தேவைகள் கருதி மேலதிகமான எரிபொருளை கோரி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் வழமை போன்று எரிபொருள் கிடைக்கப் பெறுவதாகவும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய குடிமக்களை மீட்க அரசு ஏற்பாடு செய்த மீட்பு விமானம் கேலி கூத்தானது

  • March 5, 2026
  • 0 Comments

பிராந்தியத்தில் சிக்கியுள்ள குடிமக்களை மீட்க பிரித்தானிய அரசு ஏற்பாடு செய்த முதல் மீட்பு விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமடைந்துள்ளது. ஓமான் நாட்டில் இருந்து புறப்படவிருந்த அந்த விமானம் நேற்று இரவு புறப்பட வேண்டியிருந்தாலும், தற்போது இன்று புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விரக்தியடைந்த பயணி ஒருவர் “முழுமையான கேலிக்கூத்து” என விமர்சித்துள்ளார். மேலும்,வடக்கு ஈராக் பகுதியில் உள்ள குர்திஷ் ஈரானிய படைகள், தங்கள் படைகள் ஈரானுக்குள் நுழைந்ததாக கூறப்படும் தகவல்களை […]

உலகம் செய்தி

வெடிப்பு சத்தங்களால் மூழ்கியது தெஹ்ரான்

  • March 5, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே புதிய தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெஹ்ரான் நகரின் பல பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களில் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததுடன், வானில் ஏவுகணை தடுப்பு நடவடிக்கைகளின்போது வெடிப்புகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக […]

இந்தியா செய்தி

ஈரான் போர்க் கப்பல் விவகாரம் – மோடி மௌனம் காப்பது ஏன்?

  • March 5, 2026
  • 0 Comments

இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஈரானின் போர்க் கப்பலை இலங்கை கடற்பரப்புக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியதில் 87 பேர் உயிரிழந்துள்ள போதிலும் பிரதமர் மோடி பதில் அளிக்காமல்மௌனம் காப்பது ஏன் என பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “உலகம் தற்போது மிகுந்த அசாதாரணமும், பதற்றமும் நிறைந்த காலக்கட்டத்தில் இருக்கிறது. கடுமையான […]

செய்தி

யுவதியின் சடலம் துஷ்பிரயோகம்: நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு!

  • March 5, 2026
  • 0 Comments

மலையக பெருந்தோட்டப் பகுதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் பிண அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொடூர சம்பவத்துக்கு நீதி கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டம், டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையிலேயே இக்கொடூரம் சம்பவம் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. டிக்கோயா பகுதியை சேர்ந்த 23 வயது யுவதியொருவரின் சடலம் […]

இலங்கை செய்தி தமிழ்நாடு

7 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கரையொதுங்கிய யாழ்.மீனவர்கள்!

  • March 5, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணி கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இரண்டு மீனவர்கள், ஏழு நாள்களின் பின்னர் தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற இந்த மீனவர்களின் படகு, நடுக்கடலில் இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த படகு, கடல் நீரோட்டத்தினால் இந்தியக் கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த யாழ். மீனவர்களை அவதானித்த தமிழக […]

செய்தி

ஈரான் தூதரகத்தில் குவியும் இலங்கை அரசியல் வாதிகள்!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானிய உயர் தலைவரின் மறைவையிட்டு, கொழும்பிலுள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் கையொப்பமிட்டனர். அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய உயர் தலைவர் மற்றும் ஈரானிய மக்களின் மறைவுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரசா டெல்கொஷ்ஷைச் சந்தித்துத் தமது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த […]

உலகம்

ஈரானுக்கு முடிவு கட்டுவோம்! கூட்டு தாக்குதல் தொடரும் என்கிறார் ட்ரம்ப்!!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் ஆயுதக் கிடங்கு விரைவாக அழிக்கப்பட்டு வருகிறது. கூட்டு வான் வழி தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். “ நாம் இப்போது மிகவும் வலுவான நிலையில் இருக்கிறோம். ஈரானின் தலைமை வேகமாக சிதறி வருகிறது. கெட்டவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் போது கெட்ட விடயங்களே நடக்கும். அதனால்தான் அழிக்கின்றோம்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்பதற்ற நிலை உக்கிரமடைந்துவருகின்றது . இதனால் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு அருகே மற்றுமொரு ஈரான் கப்பல்!

  • March 5, 2026
  • 0 Comments

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் மற்றொரு ஈரானிய கப்பல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. “ அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சகமும் கப்பலின் இருப்பை அறிந்துள்ளது. அதில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (05) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மேற்படி கப்பல் இலங்கை […]

செய்தி

மத்திய கிழக்கு வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித மந்திராலோசனை!

  • March 5, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள வெளிவிவகார அமைச்சர்களுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். தொலைபேசி ஊடாகவே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கட்டார், லெபனான், ஜோர்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனேயே அவர் கலந்துரையாடியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் மேற்படி நாடுகள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். மேற்படி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார். […]