உலகம்

மதுரோ அரசாங்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் விடுதலை!

  • January 9, 2026
  • 0 Comments

அரசியல் கைதிகளாகக் கருதப்படும் சிலரை  நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வெனிசுலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் உட்பட  ஐந்து குடிமக்கள் விடுவிக்கப்பட்டதாக ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் மனித உரிமை ஆர்வலரான  ரோசியோ சான் மிகுவல் ( Rocio San Miguel) உள்ளடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவின் தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் அதன் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸின் சகோதரருமான ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ், விடுவிக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அல்லது […]

இலங்கை செய்தி

இலங்கை விமானப்படைக்கு 10 ஹெலிகாப்டர்கள் நன்கொடை

  • January 9, 2026
  • 0 Comments

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்க கடற்படையின் 10 அதிநவீன ‘பெல் 206 சீ ரேஞ்சர்’ (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் (Julie Chung) தனது X தளத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ‘திட்வா’ (Ditwah) புயல் போன்ற அனர்த்தங்களின் போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்கும், விமானிகளின் பயிற்சிகளை மேம்படுத்துவதற்கும் இந்த ஹெலிகாப்டர்கள் பெரும் உதவியாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் மேலதிக […]

உலகம்

அமெரிக்காவில் எல்லை முகவர்களின் அட்டகாசம் – மேலும் இருவர் மீது துப்பாக்கிச்சூடு!

  • January 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மினியாபோலிஸில் (Minneapolis) கூட்டாட்சி முகவர் ஒருவர் பெண் ஒருவரை சுட்டுக் கொலை செய்த பிறகு நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் ஓரிகானின் போர்ட்லேண்டில் (Portland) எல்லை ரோந்து முகவர்கள் மேலும் இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லையில் சோதனையில் ஈடுபட்ட முகவர்கள்   வாகனம் ஒன்றை நிறுத்தும்படி உத்தரவிட்டதாகவும், அவர்கள் தொடர்ந்து செல்ல முற்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், சட்ட அமலாக்கப் பிரிவினர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர். மேற்படி துப்பாக்கிச்சூட்டில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் […]

இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் பிணையில் விடுவிப்பு!வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு!

  • January 9, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (09) முற்படுத்தப்பட்டவேளை 20 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் ஒன்று வெலிவேரியா பகுதியில் பாழடைந்த இடமொன்றில் இருந்து மீட்கப்பட்டது. பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது. எனவே, குறித்த துப்பாக்கி எவ்வாறு பாதாளகுழு வசம் சென்றது […]

ஐரோப்பா

இங்கிலாந்தை தாக்கிய புயல் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  • January 9, 2026
  • 0 Comments

கோரெட்டி (Goretti) புயல் காரணமாக பிரித்தானியா முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்கில்லி (Scilly) தீவுகளில் உள்ள செயிண்ட் மேரி விமான நிலையத்தில் மணிக்கு 99 மைல் வேகத்தில் காற்று வீசியுள்ளது. தென்மேற்கு இங்கிலாந்தில் 40,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தொலைபேசி வழியாக அவசர எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்படி புயல் காரணமாக ஆயிரக்கணக்கான […]

பொழுதுபோக்கு

விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: ஜனநாயகன் குறித்து அதிரடி தீர்ப்பு!

  • January 9, 2026
  • 0 Comments

ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் கருதப்படுகின்றது. இதனால் குறித்த படம் தொடர்பில் விஜய் ரசிகர்கள் வழிமீது விழிவைத்து காத்துள்ளனர். தைப் பொங்கலை முன்னிட்டு குறித்த படம் இன்று (9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுப்பு தெரிவித்தது. அத்துடன், ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. […]

உலகம்

சொல்பேச்சு கேட்காத இந்தியா – ஆயுதத்தை கையில் எடுத்த ட்ரம்ப்!

  • January 9, 2026
  • 0 Comments

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகளை தண்டிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் “பச்சை விளக்கு” (greenlit) சட்டமூலத்தை கையில் எடுத்துள்ளதாக செனட்டர் ஒருவர் அறிவித்துள்ளார். இந்த இரு கட்சி சட்டமூலமானது ரஷ்யாவிடம் இருந்து  கச்சா எண்ணெய் அல்லது யுரேனியம் வாங்குபவர்கள் மீது 500 சதவீதம் வரை வரிகளை விதிக்க அனுமதிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் கொள்வனவு செய்து வருகிறது.  இதனால் இந்தியா மீது ட்ரம்ப் பல்வேறு […]

ஐரோப்பா

பிரான்ஸின் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாரிய போராட்டம்!

  • January 9, 2026
  • 0 Comments

ஐந்து தென் அமெரிக்க நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதை எதிர்த்து, பாரிஸில் விவசாயிகள்  போராட்டம் நடத்தியுள்ளனர். பிரான்சின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் முன் நேற்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மெர்கோசூர் (Mercosur) நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா, பொலிவியா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுடன் முன்னெடுக்க திட்டமிட்டு வரும்,  வர்த்தக ஒப்பந்தத்தை பிரெஞ்சு விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிர்த்து வருகின்றனர். இது மாட்டிறைச்சி, கோழி, சர்க்கரை, எத்தனால் மற்றும் தேன் போன்ற […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமரிடமிருந்து கல்வி அமைச்சு பறிப்பு?

  • January 9, 2026
  • 0 Comments

பிரதமரிடமிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்படமாட்டாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath திட்டவட்டமாக அறிவித்தார். தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்தில் பிரதமராக செயல்படும் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya வசமே கல்வி அமைச்சும் இருக்கின்றது. இந்நிலையில் தரம் 6 ஆங்கில பாட புத்தகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முன்வைக்கப்படவுள்ளது. எனவே, பிரதமர் வசம் இருக்கும் கல்வி அமைச்சு பதவியில் […]

உலகம்

கிரீன்லாந்து தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராகும் டென்மார்க் – அமெரிக்கா!

  • January 9, 2026
  • 0 Comments

கீரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா முனைப்பு காட்டி வரும் நிலையில், இது தொடர்பில் விவாதம் நடத்த டென்மார்க் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் உரையாடல் நடத்த டேனிஷ் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோல்ஸ் லுண்ட் பவுல்சன் (Lund Poulsen) நேற்று அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கிரீன்லாந்து பற்றிய சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது டென்மார்கும் பேச்சுவார்த்தைக்கு இணங்கியுள்ளது. ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே 80% அமைந்துள்ள கிரீன்லாந்து […]

error: Content is protected !!