இலங்கை செய்தி

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

  • January 12, 2026
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. கண்டி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இந்;நிலைமையக் காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் முதல் 12 நாட்களுக்குள் 2 ஆயிரத்து 17 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் 41 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்குரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது. […]

இந்தியா செய்தி

வட இந்தியாவில் மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் நால்வர் மரணம் – 30 பேர் காயம்

  • January 11, 2026
  • 0 Comments

வட இந்தியாவின் சில பகுதிகளில் குளிர் தீவிரமடைந்தது பல பகுதிகள் அடர்ந்த மூடுபனியால் சூழப்பட்டதனால் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர். ஹோஷியார்பூர்-தசுயா(Hoshiarpur-Dasuya) சாலையில் ஒரு காரும் பேருந்தும் மோதியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர். அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட மோசமான தெரிவுநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக சாலையில் வாகனங்களை ஓட்டும் […]

செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் சமநிலையில் முடிவு

  • January 11, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில், அதிரடியாக விளையாடிய தசுன் ஷானக(Dasun […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியில் பல கைதிகளை விடுவித்த நிகரகுவா

  • January 11, 2026
  • 0 Comments

அமெரிக்க(America) ஜனதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) நிர்வாகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து நிகரகுவாவின்(Nicaragua) இடதுசாரி அரசாங்கம் டஜன் கணக்கான கைதிகளை விடுவித்துள்ளது. ஜனாதிபதி டேனியல் ஓர்டேகாவின்(Daniel Ortega) அரசாங்கம் ஒரு அறிக்கையில், “தேசிய சிறைச்சாலை அமைப்பில் இருந்த பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் குடும்பங்களுக்கு சென்றுவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளது. விடுவிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையையோ அல்லது அவர்கள் எந்த காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஒர்டேகாவின் அரசாங்கத்தின் 19 ஆண்டுகால நிறைவை நினைவுகூரும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை விவரித்தாலும் […]

உலகம் செய்தி

ஈரானில் நாடு தழுவிய போராட்டத்தில் 538 பேர் உயிரிழப்பு

  • January 11, 2026
  • 0 Comments

ஈரானில்(Iran) நாடு தழுவிய போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறையில் 538 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்று ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு வார போராட்டங்களில் 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவை(America) தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹெடி ஆசாத் (Mohammad Movahedi Azad) போராட்டங்களில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரியாக கருதப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் […]

செய்தி விளையாட்டு

ஒருநாள் தொடர் – முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி

  • January 11, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இன்று ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதல் போட்டி வதோதராவில்(Vadodara) நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிச்சேல்(Daryl Mitchell) 84 ஓட்டங்கள் பெற்றார். இதனை தொடர்ந்து […]

உலகம் செய்தி

அசாமில் தரையிறங்கிய வங்கதேச பலூன்

  • January 11, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) இருந்து வந்ததாகக் கூறப்படும் ஒரு பெரிய எரிவாயு பலூன் அசாமின்(Assam) கச்சார் மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் சில்ஹெட்டில்(Sylhet) அமைந்துள்ள கிலாச்சாரா த்விமுகி(Kilachara Dwimukhi) உயர்நிலைப் பாடசாலையின் பெயர் பலூனில் எழுதப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “வழக்கத்திற்கு மாறான பெரிய” பலூன் ஒரு விவசாய வயலில் விழுந்ததாகவும், அது உடனடியாக கவனத்தை ஈர்த்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அதனை கண்டு பயந்த கிராமவாசிகள் கிராம பாதுகாப்புக் கட்சிக்கு(VDP) தகவல் அளித்தனர் பின்னர் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலூனில் மூன்று நபர்களின் […]

செய்தி

திருகோணமலையில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

  • January 11, 2026
  • 0 Comments

திருகோணமலையின்(Trincomalee) பத்தினிபுரம் பிள்ளையார்(Pathinipuram Pillayar) கோயிலுக்கு அருகில் கஞ்சா போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கந்தளாய்(kandalai) பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். BKA 8820 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு செல்லும்போது கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் இருந்து 8 கிலோ 650 கிரேம் கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். […]

உலகம் செய்தி

கொலம்பியாவில் விமான விபத்தில் உயிரிழந்த பிரபல பாடகர்

  • January 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு கொலம்பியாவில்(Colombia) நடந்த விமான விபத்தில் கொலம்பிய பாடகரும் பாடலாசிரியருமான யீசன் ஜிமெனெஸ்(Yeason Jimenez) உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பைபா(Paipa) விமான நிலையத்திலிருந்து மெடலினுக்கு(Medellin) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தனியார் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 34 வயதான ஜிமெனெஸ் இரவு நிகழ்ச்சிக்காக மெடலினுக்கு புறப்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவில் N325FA விமானம் பைபா மற்றும் டியூடாமா(Tudama) இடையேயான பகுதியில் விபத்துக்குள்ளானதாக சிவில் ஏரோநாட்டிக்ஸின் சிறப்பு நிர்வாக பிரிவு(SAUCA) ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. […]

இலங்கை

தாய்லாந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் கிளர்ச்சி படையினர் தாக்குதல் – 04 பேர் படுகாயம்!

  • January 11, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் கிளர்ச்சி படையினர் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அந்நாட்டு இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தாய்லாந்தின் தெற்கு மாகாணங்களான நாரதிவாட் (Narathiwat), பட்டானி (Pattani) மற்றும் யாலா (Yala) முழுவதும் 11 பெட்ரோல் நிலையங்கள் தீப்பிடித்துள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.  அறிக்கை தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மலேசியாவின் எல்லையை ஒட்டியுள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்கள் சுயாட்சிக்காக போராடி வருகின்றனர். இதன்காரணமாக 2004 […]

error: Content is protected !!