இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படாது – ஜனாதிபதி அறிவிப்பு!

  • November 7, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரங்கள்  எதிர்காலத்தில் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடாது என்று தான் கருதுவதாக ஜனாதிபதி கூறினார். இருப்பினும், அரசாங்கத்தின் தற்போதைய வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் போதுமானதாக இல்லை என்றும், தற்போதுள்ள வாகனங்கள் மற்றும் இயந்திரங்களில் கணிசமான பகுதி காலாவதியானவை என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி  பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்கு கணிசமான செலவுகள் ஏற்படுவதாகவும் கூறினார். இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசு நிறுவனங்களுக்குத் […]

இந்தியா செய்தி

டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு – பல விமானங்கள் தாமதம்!

  • November 7, 2025
  • 0 Comments

டெல்லி விமான நிலையத்தில் இன்று 200க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு செய்தியிடல் அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக விமான தாமதங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விமான  புறப்பாடுகள் 30 நிமிடங்கள் தாதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய விமான நிலையங்களிலும் இதன் தாக்கம் எதிரொலித்ததாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இண்டிகோ  (IndiGo) விமான நிறுவனத்தின் பங்குகள் 1.5 சதவீதம் சரிந்தன. ஸ்பைஸ்ஜெட் […]

உலகம்

8.5 டிரில்லியன் டொலர் இலக்கு – எலோன் மஸ்க்கை வரலாறு காணாத டிரில்லியனராக மாற்றும் டெஸ்லா!

  • November 7, 2025
  • 0 Comments

டெஸ்லா (Tesla) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஊதியத்தை கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டொலருக்கு உயர்த்த டெஸ்லா பங்குதாரர்கள் இணங்கியுள்ளனர். இதன் மூலம், மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக மாறுவதற்கான பாதையில் உறுதியாக அடியெடுத்து வைத்துள்ளார். அதற்கமைய, அடுத்த 10 ஆண்டுகளில் அவர் அந்த ஊதியத்தை பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரலாற்றில் மிக அதிக ஊதியம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் இருப்பார் என குறிப்பிடப்படுகின்றது. உடன்பாட்டிற்கமைய, அவருக்கு […]

இலங்கை

கடமை நேரத்தில் கண்ணயர்ந்து தூங்கிய அர்ச்சுனா! ஜனாதிபதி தாலாட்டு பாடினாராம்!!

  • November 7, 2025
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் இன்று அர்ச்சுனா எம்.பி. கதிரையில் இருந்தவாறு தூங்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவருவதை காணமுடிகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது. அதிலுள்ள முன்மொழிவுகளை ஜனாதிபதி வெளியிட்டுவருகின்றார். ஆளும் மற்றும் எதிரணியை சேர்ந்த எம்.பிக்கள் சபையில் இருந்தவாறு அவற்றை செவிமடுத்துவருகின்றனர். எதிரணி வரிசையில் அர்ச்சுனா எம்.பியும் அமர்ந்திருந்தார். ஜனாதிபதியின் உரை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அவர் […]

பொழுதுபோக்கு

பொது இடத்தில் ‘அநாகரிக’ கேள்வி கேட்ட நிரூபர்! நடிகையின் செருப்படி பதில்

  • November 7, 2025
  • 0 Comments

மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் ‘அதர்ஸ்’ இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நிரூபர் ஒருவர் ‘உங்கள் எடை என்ன?’ என்று அநாகரிகமான முறையில் நடிகை கவுரி கிஷனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். இதன்போது கவுரி கிஷனுக்கும் அந்த நிருபருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பொட்டலம்! பலர் வைத்தியசாலையில்!

  • November 7, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு சந்தேகத்திற்கிடமான பொட்டலம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்து பார்த்த சில ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொட்டலத்தில் அடையாளம் தெரியாத வெள்ளைப் நிற பொடி இருந்ததாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் விமானம், மற்றும் அதன் துணைக் கப்பல்கள் விமான தளத்தில் உள்ளன. மேலும் ஜனாதிபதி வழக்கமாக பயணங்களுக்கு புறப்படும் இடமும் இதுதான் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பவம் […]

இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலைவழக்கு – குற்றக்கும்பல்களை சேர்ந்த 09 பேருக்கு தொடர்பு!

  • November 7, 2025
  • 0 Comments

நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களை சேர்ந்த 09 பேர் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று (7) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. அவர்களில் நால்வர் தற்போது வெளிநாட்டுகளுக்கு  தப்பிச்சென்றுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொலையில் ஆறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​இந்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் புகலிட விடுதிகளில் இருந்து கணிசமான தொகை வசூலிப்பு!

  • November 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் புகலிட விடுதிகளை நடத்தும் நிறுவனங்கள் ஈட்டிய அதிகப்படியான லாபத்திலிருந்து அரசாங்கம் £74 மில்லியன்களை வசூலித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப்பின் ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்துறை அலுவலகம் கூறியுள்ளது. தங்குமிட வழங்குநர்கள் தங்கள் ஒப்பந்த  விதிமுறைகளின் கீழ், அரசாங்கத்திற்கு சில லாபங்களைத் திருப்பித் தருவதாக முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதற்கமையவே மேற்படி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரும்பப் பெறப்பட்ட தொகை புகலிட விடுதிகளுக்கான ஒட்டுமொத்த செலவில் […]

பொழுதுபோக்கு

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்… செக் வைத்தார் விஜய் சேதுபதி

  • November 7, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இதுவரை இப்படி ஒரு பிக் பாஸ் வீட்டை பார்த்ததில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில், போட்டியை விறுவிறுப்பாக்க வைல்டு கார்ட் போட்டியாளர்கள் நால்வரை களமிறக்கியுள்ளனர். இதற்கிடையில் யார் இந்த வாரம் வெளியேறவுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது ரம்யா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. வோட்டிங் அடிப்படையில் அவர் தான் கடைசியில் இருப்பதாகவும், நாளைய எபிசோட்டில் விஜய் சேதுபதி இதை அறிவிப்பார் எனவும் […]

அரசியல் இலங்கை

ஊழல் வாதிகள் தப்ப முடியாது: ஜனாதிபதி திட்டவட்டம்!

  • November 7, 2025
  • 0 Comments

அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்தார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் […]