உலகம்

பைடனின் SAVE திட்டத்திற்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள நடவடிக்கை! மாணவர்கள் பாதிப்பு!

  • December 10, 2025
  • 0 Comments

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், 7.6 மில்லியன் கணக்கான மாணவர்கள் பெற்ற கடனை மீள செலுத்தும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை கொண்டுவர முயற்சித்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் கொண்டுவந்த   SAVE திட்டத்தின் கீழ்  மில்லியன் கணக்கான மாணவர்கள் கடன் பெற்ற நிலையில் அதனை  திருப்பி செலுத்தும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் மதிப்புமிக்க இந்த திட்டத்திற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது இந்த வழக்கு நிலுவையில் […]

அரசியல் இலங்கை செய்தி

நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தமா? அரசாங்கம் கூறுவது என்ன?

  • December 10, 2025
  • 0 Comments

பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. “ அரசாங்க அதிகாரிகளுக்கு அரசாங்க தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் விளைவிக்கப்படுவதில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச தொடர்பு இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் சிறப்பான முறையில் உறவு பேணப்பட்டுவருகின்றது. சுனாமி அனர்த்தத்தின் […]

அரசியல் இலங்கை செய்தி

Re building Sri lanka திட்டத்திற்கு 1893 மில்லியன் ரூபா நிதி உதவி

  • December 10, 2025
  • 0 Comments

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re building Sri lanka திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் 1893 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். சூறாவளியால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பது குறித்து இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைமையில் அனைத்து காப்புறுதி நிறுவனங்களின் […]

உலகம்

உள்நாட்டு போரின் போது இனப்படுகொலை செய்த சூடான் இராணுவம் – 1700 பேர் பலி!

  • December 10, 2025
  • 0 Comments

கடந்த 2023 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது சூடான் விமானப்படை நடத்திய தாக்குதல்களில்  1,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உள்நாட்டுப் போரின் போது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் குறித்த விசாரணையில் இந்த விடயம்  தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பாடசாலைகள் மற்றும் முகாம்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. அறிக்கைகளின்படி, ஏப்ரல் 2023 முதல் ஜூலை 2025 வரை 384 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

மலையகத்தில் குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் கடுமையாகும் சட்டங்கள்!

  • December 10, 2025
  • 0 Comments

மத்திய மலைநாட்டில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் குடியிருப்புகளை உருவாக்குவது தொடர்பில் கடுமையான சட்டங்களை உருவாக்குவது, அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கனமழை ஏற்பட்டால் பதுளை மாவட்டத்தின் நிலப்பரப்பில் 50 சதவீதம் வரை நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்திய பேரழிவைத் தொடர்ந்து ஆபத்தான பகுதிகளை மதிப்பிடுவதற்கு புதிய வரைபடம் மேற்கொள்ளப்படும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) இயக்குநர் ஜெனரல் ஆசிரி கருணாவர்தன கூறியுள்ளார். கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

இறுதிப்போரை வழிநடத்திய பொன்சேகா எழுதிய நூல் வெளியீடு!

  • December 10, 2025
  • 0 Comments

இலங்கையில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய நூல் நேற்று வெளியிடப்பட்டது. “நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் இந்த போரை விட்டு விடமாட்டேன்” என குறித்த நூலுக்கு பெயரடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் இதற்கான வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பிரதம விருந்தினராகவும், பாதுகாப்புச் […]

இலங்கை

இலங்கையில் மற்றுமொரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது (வீடியோ)

  • December 10, 2025
  • 0 Comments

மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் ஆபத்தை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட போதிலும் எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://web.facebook.com/reel/890871436834615

உலகம் செய்தி

சூடான் ஜன்ஜாவீத் (Janjaweed militia) போராளிக் குழுவின் தலைவருக்கு சிறை தண்டனை!

  • December 10, 2025
  • 0 Comments

சூடான் ஜன்ஜாவீத் (Janjaweed militia) போராளிக் குழுவின் தலைவருக்கு  சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளனர். 2003-2004 ஆம் ஆண்டில் வெகுஜன மரணதண்டனைகளை நிறைவேற்ற உத்தரவிட்டது மற்றும் இரண்டு கைதிகளை கோடரியால் அடித்துக் கொன்றது உள்ளிட்ட 27 போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அலி முஹம்மது அலி அப்துல்-ரஹ்மானுக்கு ( Ali Muhammad Ali Abd–Al-Rahman) ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரினர். மேற்படி […]

ஐரோப்பா

இரண்டு சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த பிரித்தானியா!

  • December 10, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் இரண்டு சீன நிறுவனங்களுக்கு  தடை விதித்துள்ளது. ரஷ்யாவிற்கு ஆதரவாக தகவல்களை திரித்ததாகவும்,  இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாகவும் அந்நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் ஜனநாயகங்களை சீர்குலைக்கவும், நமது முக்கியமான தேசிய உள்கட்டமைப்பை பலவீனப்படுத்தவும், நமது நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட கலப்பின அச்சுறுத்தலை நாம் காண்கிறோம் என பிரித்தானிய வெளியுறவுத்து தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த நிறுவனங்கள் கிரெம்ளினுக்கு ஆதரவாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைகளை […]

அரசியல் இலங்கை செய்தி

மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களுக்கு இடமில்லை!

  • December 10, 2025
  • 0 Comments

“ அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். “ அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுவான திட்டமொன்றை முன்வைத்து, அதற்கேற்பச் செயற்பட வேண்டும். கொழும்பு மாவட்டத்தினுள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களின் […]

error: Content is protected !!