இலங்கை

இலங்கை : ஹட்டனில் இடம்பெற்ற கோர விபத்து – சிசிரிடி காட்சிகள் அழிக்கப்பட்டதா?

  • December 21, 2024
  • 0 Comments

மல்லியப்பு சந்தியில்  இன்று காலை 10 மணியளவில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியால் பஸ்சை கட்டுப்படுத்த முடியாமல், சாலையை விட்டு விலகி சுமார் 20 அடி உயரமுள்ள கான்கிரீட் கட்டுக்குள் பேருந்து விழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 53 பேர் திக் ஓயா அரசாங்க மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டனைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர், […]

இலங்கை

இலங்கை: காலியில் துப்பாக்கி சூடு- கணவன் மரணம்! மனைவி படுகாயம்

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர் 38 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்போது அவருடன் வந்த அவரது மனைவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பதியினர் காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, ​​மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு […]

ஆசியா

தைவானில் தகுதியற்றவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க முன்மொழிவு!

  • December 21, 2024
  • 0 Comments

தைவானின் பிரதான எதிர்க்கட்சியான கோமிண்டாங் கட்சி முன்மொழிந்த புதிய வரைவின் அடிப்படையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியின் முன்மொழிவுகள் நீதித்துறை அமைப்பில் சீர்திருத்தங்கள் மற்றும் தகுதியற்ற அரசாங்க அதிகாரிகளை அகற்றுவது தொடர்பான புதிய சட்டங்களை உள்ளடக்கியுள்ளது. எவ்வாறாயினும், முன்மொழியப்பட்டுள்ள சட்டங்கள் நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரானது என ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி கூறுகிறது. இதன்படி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய முடியாதவாறு எதிர்க்கட்சியினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மத்திய கிழக்கு

சூடானின் அல்-பஷீர் முற்றுகையில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிர்ச்சி தகவல்

சூடானின் வடக்கு டார்பூர் மாநிலத்தில் அல்-ஃபஷிரில் மே மாதம் முதல் 700 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா மனித உரிமைகள் தலைவர் தெரிவித்துள்ளார். நகரத்தின் முற்றுகையை நிறுத்துமாறு துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளைக் கேட்டுக் கொண்டார். முற்றுகை மற்றும் “இடைவிடாத சண்டைகள் ஒவ்வொரு நாளும் பாரிய அளவில் பேரழிவை ஏற்படுத்துகின்றன” என்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். “இந்த ஆபத்தான நிலைமை தொடர முடியாது. விரைவு […]

ஐரோப்பா

ஜேர்மனியில் சந்தையில் இடம்பெற்ற தாக்குதல் : பலி எண்ணிக்கை உயர்வு!

  • December 21, 2024
  • 0 Comments

ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று (20) பிற்பகல் நபர் ஒருவர் கார் ஒன்றை சந்தைக்குள் செலுத்தி இந்த விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் 50 வயதுடைய சவூதி அரேபிய பிரஜை என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் குறித்த காரை வாடகைக்கு எடுத்து வேண்டுமென்றே […]

ஆசியா

பாகிஸ்தான் இராணுவத்தினரை குறிவைத்து தாக்கிய தலிபான்கள் : 16 பேர் படுகொலை!

  • December 21, 2024
  • 0 Comments

தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்லாமாபாத் – ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள ராணுவ நிலையின் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் மேலும் 5 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆசியா

எலைட் அகாடமியில் 18 கேடட்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; தாய்லாந்து ராணுவம் விசாரணை நடத்தியது

  • December 21, 2024
  • 0 Comments

ஆயுதப்படைப் பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த உடலியக்கச் சிகிச்சையாளர் ஒருவரால் 18 பயிற்சி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அரச தாய்லாந்து ஆயுதப் படை விசாரித்து வருகிறது. நாகோன் நாயோக் மாநிலத்திலுள்ள அந்தப் பிரசித்தி பெற்ற ராணுவப் பள்ளியில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்தேக நபரால் 18 ஆயுதப்படைப் பயிற்சி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சமூக ஊடக அறிக்கைகள் வெளிவந்ததை அடுத்து விசாரணை தொடங்கியுள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் […]

மத்திய கிழக்கு

வடக்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

  • December 21, 2024
  • 0 Comments

வடக்கு காஸா மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் குடிமைத் தற்காப்பு மீட்புப் படை தெரிவித்தது. “ஜபாலியா அல் நஸ்லாவில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் ஏழு பிள்ளைகளும் அடங்குவர். அச்சிறுவர்களில் ஆக மூத்தவருக்கு வயது ஆறு,” எனக் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் மஹ்முட் பசால் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் 15 […]

இந்தியா

இந்தியாவில் ஹோம் டெலிவரி செய்யபப்ட்ட பார்சல் … திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • December 21, 2024
  • 0 Comments

வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் இருந்தது கண்டு ஆந்திர மாநிலப் பெண் ஒருவர் அதிர்ச்சியில் மூழ்கினார். ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம், யண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி நாக துளசி. மாநில அரசு வழங்கிய வீட்டுமனையில் அவர் வீடு கட்டி வருகிறார். அந்த இடத்தில் வீடுகட்டிக் கொடுக்க ஷத்ரிய சேவா சமிதி என்ற அமைப்புக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். அவர்கள் ஏற்கெனவே வீட்டுக்குத் தேவையான பொருள்களைப் போதுமானவரை அனுப்பி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மின்சாரப் பொருள்கள் […]

பொழுதுபோக்கு

உலகளவில் புஷ்பா 2 செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

  • December 21, 2024
  • 0 Comments

2024ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படமாக புஷ்பா 2 பார்க்கப்படுகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தனர். ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக பாதிக்கப்பட்டாலும், வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டு சாதனை படைத்துள்ள புஷ்பா 2, 16 நாட்களை […]