இந்தியாவில் இணையம் வழியாக 16,000 பேரிடம் ரூ.125 கோடி மோசடி; 21 பேர் கைது
இணையம் வழியாக 16,000க்கும் மேற்பட்டோரிடம் ரூ.125 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் கூறி இந்தியாவில் 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்த இணையக் குற்றவாளிகளிடமிருந்து சிம் அட்டை – கைப்பேசி இடையிலான தொடர்புப் பகுப்பாய்வுத் தரவுகளை குர்கான் காவல்துறையினர் கைப்பற்றினர். அதன்மூலம், கடந்த இரு மாதங்களில் அவர்கள் நாடு முழுவதும் 16,788 பேரிடமிருந்து ரூ.125.6 கோடியை மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 16 கைப்பேசிகளும் ஏழு சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை உயரதிகாரி பிரியான்சு திவான் தெரிவித்தார். […]













