சிரியாவில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி – நாடு திரும்பிய 25,000க்கும் மேற்பட்ட மக்கள்
சிரியாவை சேரந்த அதிகமான மக்கள் வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்குத் திரும்புவதாகத் துருக்கி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு மக்கள் இவ்வாறு தாய் நாட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 25,000க்கும் மேற்பட்டோர் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளதாக அது கூறுகிறது. 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. அப்போது முதல் கிட்டத்தட்ட 3 மில்லியன் அகதிகள் துருக்கியிவில் தஞ்சமடைந்துள்ளனர். துருக்கி ஜனாதிபதி ரிசப் தயிப் எர்துவானின் (Tayyip Erdogan) […]













