ஆசியா

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 பேரின் உடல்கள் மீட்பு!

  • December 9, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டள்ளதாகவும், இருவர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் பெய்த மழை  மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபுமி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட வழிவகுத்தது. இதில் சுமார் 170  கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகவும் பல வீடுகள் மண்ணுள் புதையுண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பேரழிவுகள் 31 பாலங்கள், 81 சாலைகள் மற்றும் 539 ஹெக்டேர் (1,332 ஏக்கர்) நெல் வயல்களையும் அழித்ததாக கூறப்படுகிறது. 1,170 வீடுகள் கூரை வரை வெள்ளத்தில் மூழ்கின. […]

ஆசியா

தைவான் நீரிணை பகுதியில் பரவலான இராணுவ பயிற்சிக்கு தயாராகி வரும் சீனா!

  • December 9, 2024
  • 0 Comments

தைவானின் ஜனாதிபதி ஹவாய் மற்றும் குவாமுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தமைக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவின் இராணுவம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட பயிற்சிகளுக்கு தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது. தைவான் நீரிணை மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளுக்குள் சீன கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களைக் கண்டறிந்ததாகவும், கடந்த புதன்கிழமை வரை சீனா அதன் தென்கிழக்கு கடற்கரையில் வான்வெளியைக் கட்டுப்படுத்தியதாகவும் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த தகவல்களை சீனா உறுதிப்படுத்தவில்லை. தைவான் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை, அவசரகால பதில் மையத்தை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய 3000 மாணவர்கள்!

  • December 9, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த ஆண்டில் 3000 குழந்தைகள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி கொள்கை நிறுவனத்தின் (ஈபிஐ) புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இது ஜி.பி. பதிவுகளை பள்ளி சேர்க்கை தரவுகளுடன் ஒப்பிடுகிறது. 2017 முதல் தற்போது வரையில் 40 சதவீத அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 50,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 11 ஆம் ஆண்டுக்குள் மாநில கல்வி முறையை விட்டு வெளியேறியதாகவும், அவர்கள் வெளியேறியமைக்கான தெளிவான பதிவுகள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த நிழல் கல்வி செயலாளர் […]

உலகம்

சிரியாவில் ஆட்சிகவிழ்ப்பு : தளம்பல் நிலையில் நிதிச் சந்தைகள்!

  • December 9, 2024
  • 0 Comments

சிரியாவில் அசாத் ஆட்சியின் மறைவு நிதிச் சந்தைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ச்சியான உறுதியற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, கச்சா எண்ணெயின் விலையும் நிலையான தன்மையில் இல்லை. ப்ரெண்ட் கச்சா ஒரு பீப்பாயில் $ 71 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 06. சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் லண்டனில், FTSE 100 8,347 ஆக 0.4% அதிகரித்தது. அதேபோல் சந்தைகளில்  டோமினோவின் பீஸ்ஸா பங்குகள் 0.8% கீழே […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – அமெரிக்கா நேட்டோவை விட்டு வெளியேறும் : ட்ரம்ப் எச்சரிக்கை!

  • December 9, 2024
  • 0 Comments

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உடனடி தீர்வை எட்டுமாறு விளாடிமிர் புட்டினிடம் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். எனக்கு விளாடிமிர் நன்றாகத் தெரியும், இது அவர் செயல்பட வேண்டிய நேரம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், உக்ரேனுக்கு அமெரிக்க இராணுவ உதவியைக் குறைப்பது தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் கூறினார். மற்ற உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்புகளை அதிகரிக்கத் தவறினால் அமெரிக்கா […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

சிரியாவில் இரசாயன ஆயுத தளங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்!

  • December 9, 2024
  • 0 Comments

சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தளங்கள் மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகளை தாக்கியதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். “தீவிரவாதிகளின் கைகளில்” ஆயுதங்கள் சிக்குவதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கிதியோன் சார் கூறினார். சிரியாவில் 50 ஆண்டுகால ஆட்சி செய்த அல் அசாத் நாட்டை விட்டு தப்பியோடியுள்ள நிலையில், அந்நாடு தற்போது கிளர்ச்சியாளர்களின் வசமாகியுள்ளது. இந்நிலையிலேயே இஸ்ரேல் தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள பஷர் அல்-அசாத் ; சிரியாவில் உள்ள ISIS முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

  • December 9, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியா கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது. 24 ஆண்டுகளாக அதிபராக இருந்த அல்-அசாத் நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளர். அவர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ கிளர்ச்சியாளர்கள் வசம் தற்போது சிரியா சென்றுள்ள நிலையில், சிரியா பிரதமர் முகமது காசி ஜலாலி வெளியிட்ட வீடியோ பதிவில், எதிர்க்கட்சிகளுடன் கைகோர்க்கவும், ஒரு இடைக்கால அரசை நிறுவவும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர், கிளர்ச்சி குழுவின் […]

இலங்கை

நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் ஏற்படும் சேதம் : மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு!

  • December 9, 2024
  • 0 Comments

நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தேவையற்ற மற்றும் தவறான பயன்பாடு காரணமாக, அந்த மருந்துகளுக்கு எதிராக மனித உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர், உண்மையில் நாம் நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் மருந்துகளை எதிர்ப்பது பற்றிப் பேசுகிறோம். நுண்ணுயிரிகள் என்று சொல்லும்போது முக்கியமாக 4 வகைகள் உள்ளன. பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள். இவைகளுக்கு எதிராக உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகள் இங்கே. […]

இந்தியா

இந்தியாவில் காப்புறுதிப் பணம் பெற கொலை செய்து ஆள்மாறாட்டம் செய்த மூவர் – இருவர் கைது

  • December 9, 2024
  • 0 Comments

கடனில் சிக்கித் தவித்த ஒருவர் காப்புறுதி நிறுவனத்தை நூதன முறையில் ஏமாற்றிப் பணம் பெறுவதற்காக கொலை செய்து மாட்டிக்கொண்டார்.ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திர சிங் ராவத் என்பவர் மற்ற இருவருடன் சேர்ந்து அந்த செயலில் ஈடுபட்டதைக் காவல்துறை கண்டுபிடித்தது. கோட்டா என்னும் பகுதியைச் சேர்ந்த துஃபான் சிங் பைரவா என்பவர் துப்புரவு வேலைகளைச் செய்ததுடன் அன்றாடச் செலவுக்குப் பணப் பற்றாக்குறை இருந்ததால் ஆங்காங்கே பிச்சை எடுத்து வீதியில் பிழைப்பு நடத்தி வந்தார்.அவரைக் கண்ட நரேந்திர […]

மத்திய கிழக்கு

வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்

  • December 9, 2024
  • 0 Comments

காஸாவின் வடபகுதியில் உள்ள ‘பீட் லஹியா’ நகரின் ‘கமால் அட்வான்’ மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்துள்ளனர்.அதன் காரணமாக, மின்சாரமும் பிராணவாயு இயந்திரங்களும் சேதமுற்றன. உடனடி அறுவை சிகிச்சைகளுக்குப் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் இயக்குநர் ஹுசாம் அபு சஃபியா, கிட்டத்தட்ட 100 பீரங்கிக் குண்டுகளாலும் வெடிகுண்டுகளாலும் மருத்துவமனை தாக்கப்பட்டதாகக் கூறினார்.இந்தத் தாக்குதலில் மருத்துவ ஊழியர்களும் நோயாளிகளும் காயமடைந்தனர். “நிலைமை மிக ஆபத்தாக உள்ளது. […]