இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

சிரியாவில் ஆட்சி மாற்றம் – புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரான்ஸ் எடுத்த தீர்மானம்

  • December 11, 2024
  • 0 Comments

பிரான்ஸ் புகலிட கோரிக்கை முன்வைத்துள்ள சிரியா நாட்டவர்கள் அனைவருக்கும் அதனை நிராகரிக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது. சிரியாவில் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரியாவின் ஜனாதிபதி Bashar al-Assad, நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். அங்கு கிளர்ச்சிப்படைகள் தலைநகரை முற்றுகையிட்டுள்ளன. இந்நிலையில், பிரான்சில் வசிக்கும் சிரியாவைச் சேர்ந்த அரசியல் அகதிகளுக்கான புகலிடக்கோரிக்கைகளை முழுவதுமாக இரத்துச் செய்ய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெர்மனி – சர்வதேச நிறுவனம் தகவல்

  • December 11, 2024
  • 0 Comments

ஜெர்மனி பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக சர்வதேச பொருளாதார நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது, தொழில்துறை வீழ்ச்சியால் பொருளாதார பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதாக, S and P Global நிறுவனம்தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட purchasing managers index அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கணிப்பீட்டுக்கு அமைய purchasing managers index 50 வீதத்திற்கும் குறைவாக காணப்பட்டால் அது பொருளாதார வீழ்ச்சியை குறிப்பதாகும். இந்த நிலையில் 20 நாடுகள் கொண்ட ஐரோப்பிய வலயமைப்பின் purchasing managers index […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் உயிரிழந்த பெண் உயிர் பெற்ற அதிசயம் – இறுதிச் சடங்கில் விபரீதம்

  • December 11, 2024
  • 0 Comments

ஸ்பெயினில் உயிரிழந்ததாக நம்பப்பட்ட பெண் ஒருவர் அவருடைய இறுதிச்சடங்கின்போது உயிர்பெற்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. Son Valenti இறுதிச் சடங்கு இல்லத்தில் பெண்ணின் உடலைத் தயார் செய்துகொண்டிருந்தபோது அவரது விரல்கள் அசைவதை ஊழியர்கள் கவனித்தனர். அவர்கள் உடனடியாகப் பணிகளை நிறுத்தினர். மருத்துவ அதிகாரிகள் அங்கு வந்தபோது, பெண் இன்னும் உயிருடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. catalepsy எனும் நரம்பியல் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

  • December 11, 2024
  • 0 Comments

கடந்த நாட்களுடன் ஒப்பிடும் போது இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 770,159.00 ரூபாவாக இருந்த தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலை நேற்று 776,318.00 ரூபாவாக சிறிதளவு அதிகரித்து காணப்படுகிறது. மேலும் நேற்று முன்தினம் 24 காரட் 1 கிராம் விலை 27,390.00 ரூபாவாகவும், 22 மற்றும் 21 காரட் 1 கிராம் முறையே 25,110.00 ரூபாவாகவும் 23,970.00 ரூபாவாகவும் உள்ளது. நேற்று முன்தினம் 24 காரட் 1 கிராம் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

கிரேஹவுண்ட் பந்தயத்தை தடை செய்த நியூசிலாந்து

  • December 10, 2024
  • 0 Comments

நியூசிலாந்து கிரேஹவுண்ட் பந்தயத்தை தடை செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த விளையாட்டு நீண்ட காலமாக நாட்டில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது, சில வளர்ப்பாளர்கள் விலங்குகளை தவறாக நடத்துவதாக அல்லது ஊக்கமருந்து செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். அடுத்த 20 மாதங்களில் பந்தயத்தை நிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, பந்தய நாய்களை மறுவாழ்வு செய்வதற்கு அனுமதிக்கும். நியூசிலாந்தைத் தவிர, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, யுகே மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வணிக ரீதியான கிரேஹவுண்ட் பந்தயம் அனுமதிக்கப்படுகிறது. “சமீபத்திய ஆண்டுகளில் கிரேஹவுண்ட் பந்தயத் துறையில் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் ரக்பி வீரர்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்த அர்ஜென்டினா நீதிமன்றம்

  • December 10, 2024
  • 0 Comments

அர்ஜென்டினாவில் நடந்த போட்டியின் பின்னர் பெண் ஒருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பிரெஞ்சு சர்வதேச ரக்பி வீரர்கள் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை அர்ஜென்டினா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்று வீரர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். “நாங்கள் எதிர்பார்த்தது போல, பிரான்ஸ் வீரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், குற்றம் எதுவும் இல்லை மற்றும் அவர்கள் நிரபராதி என்பதில் சந்தேகமில்லை” என்று மென்டோசா நகரத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு பாதுகாப்பு வழக்கறிஞர் ஜெர்மன் ஹனாடோ தெரிவித்தார். 21 வயதுடைய Hugo Auradou […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

பிரேசில் ஜனாதிபதி குறித்து வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை

  • December 10, 2024
  • 0 Comments

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் தலைக்குள் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்காக அவசர அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவர் நிலையாக இருப்பதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். “அவர் சீரான நிலையில் இருக்கிறார், சாதாரணமாகப் பேசி, சாப்பிட்டு வருகிறார். அடுத்த சில நாட்களுக்கு அவர் கண்காணிப்பில் இருப்பார்” என்று டாக்டர் ராபர்டோ கலில் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் பாலோ பிமென்டா, லூலா இன்னும் 48 மணி நேரம் தீவிர சிகிச்சை […]

ஐரோப்பா செய்தி

கொலை பற்றிய அதிக ஆர்வத்தால் 34 வயது பெண்ணை கொன்ற கிரிமினாலஜி மாணவன்

  • December 10, 2024
  • 0 Comments

இங்கிலாந்தை சேர்ந்த கிரிமினாலஜி (குற்றவியல்) பட்டப்படிப்பு மாணவன் கொலை செய்வது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள நிஜமாகவே கொலைகளை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த 20 வயதான நசென் சாடி லண்டனில் உள்ள க்ரீன்விச் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி பயின்று வந்த மாணவர். படிப்பு சம்பந்தமாக கொலைகளை பற்றி ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். எனவே “ஒரு உயிரைப் பறித்தால் எப்படி இருக்கும்” என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த […]

இலங்கை செய்தி

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளராக டாக்டர் அனில் ஜாசிங்க நியமனம்

  • December 10, 2024
  • 0 Comments

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் கலாநிதி ஜாசிங்கவிடம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் டிரக்-வேன் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

  • December 10, 2024
  • 0 Comments

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் டிரக்கும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹத்ராஸ் சந்திப்பு காவல் நிலையத்திற்குட்பட்ட ஜெய்த்பூர் கிராமத்தில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக சிக்கந்தராவ் வட்ட அதிகாரி ஷைம்வீர் சிங் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். “இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் அடையாளத்தைக் கண்டறிய அழைக்கப்பட்டுள்ளனர்,” என்று […]