இந்தியாவில் முதன்முறையாக இரண்டரை நாளேயான பச்சிளங்குழந்தையின் உடல் தானம்
இரண்டரை நாளேயான குழந்தையின் உடலை மருத்துவ ஆய்வுக்காக அதன் குடும்பம், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கியுள்ளது. இந்தியாவில் இவ்வளவு வயது குறைவான ஒருவரின் உடல் இதற்கு முன்பு தானமாக வழங்கப்பட்டதில்லை என்று இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சரஸ்வதி என்று பெயர் சூட்டப்பட்ட அக்குழந்தை மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்தது. பிறந்து சிறிது நேரத்திலேயே அக்குழந்தை இறந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் தானமாக வழங்கப்பட்டது. இந்தியாவில் பிறந்த குழந்தையின் உடல் […]













