ஐரோப்பா

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் : விமான சேவைகளை நிறுத்திய பிரித்தானியா!

  • September 20, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடான லெபனானிற்றும் – ஹிஸ்புல்லாவிற்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சகங்கள் பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளன. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் தற்போது லெபனானில் இருந்தால், வணிக விருப்பங்கள் இருக்கும் வரை வெளியேறுமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்சா மற்றும் ஏர் பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் நகருக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. டெல்டா […]

இலங்கை

இலங்கையில் காச நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

  • September 20, 2024
  • 0 Comments

காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டத்தின்படி, கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பதாகவும் தேசிய வேலைத்திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் மிசாயா காதர் தெரிவித்தார். காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்கள் குறித்து சுகாதார […]

உலகம்

இஸ்ரேல் கடுமையாக போர் குற்றம் செய்துள்ளது – ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு!

  • September 20, 2024
  • 0 Comments

லெபனான் போராளிக் குழுவின் தலைவர்   இஸ்ரேல் போர் குற்றம் செய்ததாக  குற்றம் சாட்டியுள்ளார். லெபனானில் வாக்கி-டாக்கி வழியாக இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் ஏறக்குறைய 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 600 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் “எல்லா எல்லைகளையும் சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டது” என்றும் 5000 பேர் இலக்கு வைக்கப்பட்டதாகவும்  குறிப்பிட்டுள்ளதுடன், போர் குற்றவாளியாக இஸ்ரேலை விமர்சித்துள்ளார்.

ஐரோப்பா

போர்த்துகலில் பற்றியெரியும் காட்டுத் தீ – 7 பேர் உயிரிழப்பு – சொத்துக்கள் சேதம்

  • September 20, 2024
  • 0 Comments

போர்த்துகல் நாட்டில், அவீரோ மற்றும் விசியூ உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுத் தீ உச்சக்கட்ட வேகத்தில் பரவி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீயில், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பரப்பு எரிந்து சாம்பலானது. 7 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகளும் தீயில் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிபத்துக்குக் காரணம் என்ற சந்தேகத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை

இலங்கையில் வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் முதற்கட்ட செயற்பாடுகள் ஆரம்பம்!

  • September 20, 2024
  • 0 Comments

இலங்கையில் நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதிகாரிகளை வாக்களிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் முதற்கட்ட செயற்பாடுகள் இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள 13,421 வாக்களிப்பு மையங்களுக்கு வாக்குப் பெட்டி மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் […]

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறினார் பசில்!

  • September 20, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் சென்றதாக விமான நிலைய கடமை முகாமையாளர் தெரிவித்தார். அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் (EK-649) துபாய்க்குப் புறப்பட்டார். இந்த விமானத்தை அணுகுவதற்காக அவர் USD 206 செலுத்தியதாகவும், BIA இல் உள்ள ‘கோல்ட் ரூட்’ முனையத்தில் வசதியைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. பசில் ராஜபக்ச முதலில் டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வார் […]

செய்தி வாழ்வியல்

எந்த இரத்த மாதிரிகளுக்கு எந்த நோய்க்கான ஆபத்து அதிகம்?

  • September 20, 2024
  • 0 Comments

நம் அனைவரின் உடலிலும் இரத்தம் ஓடுகிறது. இரத்த ஓட்டம் நாம் உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக விளங்குகின்றது. இரத்தத்தில் பல வகைகள் உள்ளன. இவை மருத்துவ மொழியில் குழுக்கள் அதாவது க்ரூப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இரத்தக் குழுவானது நமது பெற்றோரிடமிருந்து நமக்கு கிடைக்கும் பரம்பரைக்கான சான்று. நாம் யாருக்கு, யார் நமக்கு இரத்தம் கொடுக்க முடியும் என்பதை இரத்தக் குழு மூலம் தெரிந்துகொள்ளலாம். இரத்தக் குழு மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நமக்கு எந்த நோய் வரும் அபாயம் […]

கருத்து & பகுப்பாய்வு

ஏறக்குறைய 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை சுற்றி காணப்பட்ட வளையம்!

  • September 20, 2024
  • 0 Comments

பூமி 466 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சனி போன்ற வளைய அமைப்பைக் கொண்டிருந்திருக்கலாம், அது கடந்து செல்லும் சிறுகோள் ஒன்றை கைப்பற்றி சிதைந்த பிறகு, தற்போதைய வடிவமைப்பை பெற்றிருக்கலாம்  என புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருக்கும் குப்பை வளையம், உலகளாவிய குளிர்ச்சிக்கு வழிவகுத்திருக்கலாம் மற்றும் கடந்த 500 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் மிகவும் குளிரான காலகட்டத்திற்கு பங்களித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள 21 பள்ளங்கள் பற்றிய புதிய பகுப்பாய்வின்படி, 488 மில்லியன் […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 – தெரிந்து கொள்ளவேண்டியவை?

  • September 20, 2024
  • 0 Comments

இலங்கையில் நாளைய தினம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றிபெறுபவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலங்கை ஜனாதிபதியாக பதவி வகிப்பார். நடப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உள்ளிட்ட 39 பேரின் வேட்பு மனுக்களை இலங்கை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. ஆனால் ஒரு வேட்பாளர் காலமானார்; அதனால் எஞ்சிய 38 வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கின்றனர். தேர்தல் பிரசாரம் விக்ரமசிங்க கடந்த மாதம் 17ஆம் திகதி தமது தேர்தல் பிரசாரத்தை அனுராதபுரத்தில் (Anuradhapura) […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Instagram பயனர்களுக்கு ஏமாற்றம் – Beauty Filters-ஐ நீக்கும் மெட்டா!

  • September 20, 2024
  • 0 Comments

இளம்வயதினர்களிடையே இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில், மெட்டா நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன்படி சமீபத்தில் மெட்டா நிறுவனமானது இன்ஸ்டாகிராமில் பதின்ம வயது பயனாளர்களை பாதுகாக்கும் வகையில், ‘டீன் அக்கவுண்ட்ஸ்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி டீன் அக்கவுன்டர்களின் கணக்குகளை அவர்களுடைய பெற்றோரும் இனி கன்ட்ரோல் செய்யப்படும். அந்த அம்சத்தின் படி, இனி 16 வயதுக்கு […]

error: Content is protected !!