செய்தி வாழ்வியல்

எந்த இரத்த மாதிரிகளுக்கு எந்த நோய்க்கான ஆபத்து அதிகம்?

நம் அனைவரின் உடலிலும் இரத்தம் ஓடுகிறது. இரத்த ஓட்டம் நாம் உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக விளங்குகின்றது. இரத்தத்தில் பல வகைகள் உள்ளன. இவை மருத்துவ மொழியில் குழுக்கள் அதாவது க்ரூப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இரத்தக் குழுவானது நமது பெற்றோரிடமிருந்து நமக்கு கிடைக்கும் பரம்பரைக்கான சான்று.

நாம் யாருக்கு, யார் நமக்கு இரத்தம் கொடுக்க முடியும் என்பதை இரத்தக் குழு மூலம் தெரிந்துகொள்ளலாம். இரத்தக் குழு மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நமக்கு எந்த நோய் வரும் அபாயம் உள்ளது என்பதை இரத்தக் குழுக்களில் இருந்தும் கண்டறியலாம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. ஆம், நமக்கான பிளட் க்ரூப் மூலமே, நாம் எந்தெந்த நோய்களால் பாதிக்கப்படக் கூடும் என்பதை கண்டறியய் முடியும்.

இரத்தத்தில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன: ஏ, பி, ஏபி மற்றும் ஓ.

எந்த பிரிவு இரத்தம் இருந்தால், எந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது? இதைப் பற்றி மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.

ஏபி இரத்த பிரிவு (AB Blood Group)

by TaboolaSponsored LinksYou May Like
சென்னையில் கம்மி விலையில் 2BHK தனி வீடு புதிய பிளாட் விற்பனைக்கு / சென்னை OMR நீங்கள் விரும்பலாம்
Villa For Sale in Chennai | Search Ads
சென்னையில் வில்லாக்கள் நீங்கள் நினைப்பதை விட மலிவானதாக இருக்கலாம்.
Villa For Sale in Chennai | Search Ads
– AB இரத்தக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு இதய ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
– இவர்களுக்கு எந்த நேரத்திலும் திடீரென மாரடைப்பு வரலாம்.
– ஏபி இரத்த பிரிவு உள்ளவர்களுக்கு நினைவாற்றலும் பலவீனமானதாக இருக்கும்.
– இந்த இரத்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை இரத்தம் தொடர்பான நோயால் பாதிக்கப்படலாம்.
– AB இரத்த வகை உள்ளவர்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

See also  சர்ச்சையை ஏற்படுத்திய சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி

A மற்றும் B இரத்த பிரிவு (A Blood Group, B Blood Group)

– A மற்றும் B இரத்தக் குழுக்களில் உள்ளவர்களுக்கு இரத்தம் உறைதல் பிரச்சனை, அதாவது உடலில் இரத்தக் கட்டிகள் உருவாகும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
– A மற்றும் B இரத்தக் குழுக்கள் உள்ளவர்களுக்கு அவர்களது வாழ்வு காலத்தில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
– A மற்றும் B இரத்த வகை உள்ள சிலருக்கு, நினைவாற்றல் பிரச்சனை வரும் வாய்ப்புகள் உள்ளன.
– சிலருக்கு மூளையின் செயல்பாட்டிலும் சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
– இந்த இரத்த வகை உள்ளவர்களின் கொலஸ்ட்ரால் அளவு தொடர்ந்து ஏற்ற இறக்கத்தோடு, கட்டுக்குள் இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு மாரடைப்பும் ஏற்படலாம்.
– A வகை இரத்தம் உள்ளவர்களுக்கும் மன அழுத்த பிரச்சனைகள் இருக்கும்.
– இவர்கள் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.

மேலும் படிக்க | கொழுப்பை எரிக்கும் ஆப்பிள் சைடர் வினிகர்… எடுத்துக் கொள்ளும் சரியான முறையும்… பக்க விளைவுகளும்

O இரத்த பிரிவு (O Blood Group)

See also  போர் நிறுத்தம் கோரி அமெரிக்காவில் நடந்த பேரணியில் தீக்குளித்த நபர்

– O இரத்தக் குழுவும் இரண்டு வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன – O பாசிடிவ் மற்றும் O நெகடிவ்.
– மற்ற இரத்தக் குழுக்களை விட O இரத்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
– O+ இரத்த பிரிவு உள்ளவர்களுக்கு இதய நோய் வராது என கூறப்படுகின்றது.
– O+ இரத்தக் குழுவைக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்றுநோயின் அபாயமும் குறைவாகவே இருந்தது.
– O+ உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் விலகி இருக்கிறார்கள்.
– இவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
– O- இரத்தக் குழு சில அளவுருக்களில் நன்மை பயக்கும், சில சூழ்நிலைகளில் ஆபத்தானது.

ஓ- இரத்தப் பிரிவு யுரிவர்சலாக உள்ளது. O- இரத்த பிரிவு உள்ளவர்கள் தங்கள் இரத்தத்தை யாருக்கு வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டால், அவர்கள் தங்கள் சொந்த இரத்த வகை, அதாவது O- இரத்த வக்கை உள்ள நபரின் இரத்தத்தை மட்டுமே பெற முடியும். O- இரத்தம், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த இரத்தக் குழுவாக உள்ளது. அவர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டால், அது எப்போதும் அவசரநிலையாகவே இருக்கும். ஏனெனில் இந்த இரத்தக் குழுவைக் கொண்டவர்கள் இரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டவுடன் மரணத்தை செல்லத் தொடங்குகிறார்கள்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content