ஐரோப்பா

பிரான்ஸிற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் : சந்தர்ப்பதை பயன்படுத்திகொள்ளும் பயங்கரவாதிகளால் அச்சம்!

  • July 6, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெறும்  ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறவிருந்த பல தாக்குதல்களை பிரஞ்சு உளவுத்துறை முகவர்கள் முறியடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதியில் திறக்கப்படும் ஒலிம்பிக்  விளையாட்டு களியாட்டத்தில் கலந்து கொள்ள பிரித்தானிய உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குறைந்தது ‘இரண்டு தனித்தனி வழக்குகள்’ தொடர்பாக ‘பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக   பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறினார். அவர்கள் நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு!

  • July 6, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் NHS இல் பல மாற்றங்களை  அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக  குறிப்பாக அவர்களின் உள்ளூர் GP அறுவை சிகிச்சைகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சுகாதார சேவையை பரந்த அளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் விரிவான சீர்திருத்தங்களில், நியமனங்கள் எவ்வாறு திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றன என்பதற்கான மறுசீரமைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி புதிய அரசாங்கம் நோயாளிகளின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய விநியோகத்தை அதிகரிக்க “இன்னும் ஆயிரக்கணக்கான ஜிபிகளுக்கு பயிற்சி அளிக்க” திட்டமிட்டுள்ளதாக […]

அறிந்திருக்க வேண்டியவை

உயிருக்கே ஆபத்தான தமனி அடைப்பு : இந்த அறிகுறிகள் உங்களுக்கும் உள்ளதா? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டி முக்கிய தகவல் இங்கே

உலகளவில் ஏற்படும் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக மாரடைப்பு உள்ளது. வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறை பழக்கங்கள், உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த சர்க்கரை, உயர் இரத்த கொழுப்புகள், உடல் பருமன் போன்றவை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. அதே சமயம், தொழில்நுட்பரீதியாக இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை விநியோகிக்கும் தமனிகள் தடுக்கப்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இது பெருந்தமனி தடிப்பு அல்லது ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் என அழைக்கப்படுகிறது. உடலுக்குத் […]

ஐரோப்பா

அட்லாண்டிக் கடல் பகுதியில் விபத்திற்குள்ளான அகதிகள் படகு ; 89 பேர் உயிரிழப்பு

  • July 6, 2024
  • 0 Comments

வடமேற்கு ஆபிரிக்க நாடான மாரிடோனியா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், நடுக்கடலில் தத்தளி்துக்கொண்டிருந்த மீன்பிடி படகிலிருந்து 89 உடல்களை மாரிடோனியா படரோலக்காவல் படையினர் மீட்டனர். மேலும், அந்தப் படகிலிருந்து 5 வயது சிறுமி உற்பட 9 பேருடன் உயிருடன் மீட்கப்பட்டனர். செனகல் மற்றும் காம்பியாவிலுந்து 170 பேரை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்றுகொண்டிருந்த போது அந்தப்படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானதாக […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

மீண்டும் வந்த DD… தெறிக்க விட்ட ரசிகர்கள்… என்ன செய்தாங்க தெரியுமா?

  • July 6, 2024
  • 0 Comments

ஒரு காலத்தில் தொகுப்பாளினி டிடி இல்லாமல் மேடை நிகழச்சிகள் இல்ல என்ற அளவுக்கு பேமசாகவும், பட தொட்டியெங்கும் பிரபலயமானவர் தான் டிடி. இவர் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் மாத்திரம் பணியாற்றி வருகிறார். பத்து வருடங்களுக்கும் மேலாக கால் முட்டியில் பிரச்சனை இவருக்கு இருக்கிறது. அதிகமான நேரம் நின்று கொண்டே ஆங்கரிங் செய்து கொண்டிருப்பதால் காலில் வலி அதிகமாகி […]

ஐரோப்பா

ஸ்பெயினில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகள் : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

  • July 6, 2024
  • 0 Comments

இந்த கோடையில் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேனரி தீவுகளில் அதிகளவில் டெங்கு நோய் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெனெரிஃபின் தலைநகரான சாண்டா குரூஸ் துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களுக்குள் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் மற்றும் பயணக் கப்பல்கள் வந்து செல்லும் பெரிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட ஒரு பகுதியைச் சுற்றி ஆபத்தான பூச்சிகள் அச்சத்தை ஏற்படுத்துகிறது என ஸ்பெயினுக்கான […]

ஆசியா

அணை உடைந்ததால் மத்திய சீனாவில் கடும் வெள்ளப்பெருக்கு ; 6,000 பேர் வெளியேற்றம்

  • July 6, 2024
  • 0 Comments

ஆசிய நாடுகளைத் தீவிர வெப்ப அலைகள் வாட்டி வதைத்துவரும் சூழலில் சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் தடுப்பணை ஒன்றில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகச் சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்தது. சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் ஹுனான் மாநிலத்தில் உள்ள டோங்டிங் ஏரியின் தடுப்பணையில் ஜூலை 5ஆம் திகதி மாலை உடைப்பு ஏற்பட்டதாகவும் அது கூறியது.அந்த ஏரிக்கும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து […]

உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • July 6, 2024
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ்  போர் நிறுத்தம் தொடர்பானபேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினரும் இதுவரையில் உடன்பாடு எட்டப்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காஸா போர்நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை முன்மொழிந்துள்ளதாகவும், இஸ்ரேலின் நிலைப்பாடு தெளிவற்றதாக இருந்தாலும் திருத்தங்கள் சாதகமான பதிலைப் பெற்றுள்ளதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது. இம்மாதம் வாஷிங்டனில் இஸ்ரேல் பிரதமரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை […]

இலங்கை

இலங்கையில் பேருந்து விபத்து – 9 பேர் வைத்தியவாலையில் அனுமதி! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹல்பே பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பத்தாவளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பேருந்து பாதையை விட்டு விலகி அருகில் இருந்த ஹோட்டல் சுவரில் மோதியது. விபத்தில் காயமடைந்த 4 பெண்களும் 5 ஆண்களும் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை […]

இலங்கை

இலங்கை: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த சிசு மரணம் குறித்து சிறப்பு விசாரணை

மாத்தறை மாவட்டம், கம்புருகமுவ புதிய வைத்தியசாலையில், பால் குடித்து ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட இரண்டு மாதக் குழந்தையொன்றுக்கு சிகிச்சை வழங்க மறுத்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவின் பணிப்புரையின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை அளவிலான விசாரணையும் நடந்து வருகிறது. ஜூலை 3 ஆம் திகதி, கம்புருகமுவ வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிசுவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த […]