பிலிப்பைன்ஸில் வெளிநாட்டு சுற்றுலாபயணிகளைக் குறிவைத்த கடத்தல் கும்பல் கைது
பிலிப்பைன்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சீன, மலேசிய சுற்றுப்பயணிகளைக் குறிவைத்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை பிலிப்பைன்ஸ் உள்துறை அமைச்சர் பென்ஹர் அபாலோஸ், ஜூன் 5ஆம் திகதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் முன் நிறுத்தினார். சந்தேக நபர்களில் உளவுப் பிரிவு உயர் அதிகாரியான மேஜர் கிறிஸ்டெல் கார்லோ வில்லானுயேவாவும் ஒருவர். மற்றவர்கள் சார்ஜெண்ட் பதவி வகிப்பவர்கள். கடத்தல் கும்பலில் குறைந்தது 14 பேர் இருப்பதாக நம்பப்படுகிறது.அவர்களில் சீனாவைச் சேர்ந்த ஒருவரும் மலேசியர் ஒருவரும் […]













