இலங்கை

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (மே 10) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 72 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 82 சதமாகக் காணப்பட்டது. […]

இலங்கை

இலங்கை – பெண் பொலிஸை வன்புனர முயன்ற கான்ஸ்டபிள் கைது

  • May 10, 2024
  • 0 Comments

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்ற குற்றத்தின் பேரில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், மாங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும், மாங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கரையோரப் பொலிஸாரின் மகளிர் படைமுகாமிற்கு இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த குறித்த கான்ஸ்டபிள், அங்கு உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் […]

பொழுதுபோக்கு

50 கோடி வசூலை தாண்டிய அரண்மனை?? 2024ஆம் ஆண்டின் முதல் வெற்றிப்படம்

  • May 10, 2024
  • 0 Comments

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் கடந்த நான்கு மாதங்களாக வெளியான பல படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. படத்தை தியேட்டருக்கு வந்து பார்ப்பதை ரசிகர்கள் பெருமளவில் தவிர்த்து விட்டனர். அதன் காரணமாக ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான பிளாக்பஸ்டர் படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து தியேட்டர்களை நடத்த வேண்டிய சூழலுக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டது. இந்த நிலையில் தமிழ் சினிமா அரண்மனை 4 படத்தின் மூலம் முதல் வெற்றியை ருசித்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் […]

தமிழ்நாடு

தமிழகத்தில் அதிர்ச்சி!! +2 தேர்வில் 494 மதிப்பெண்கள்… சோகத்தில் விபரீத முடிவெடுத்த மாணவன்

  • May 10, 2024
  • 0 Comments

கம்பத்தில் 12ம் வகுப்பில் 494 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவன், மதிப்பெண் குறைந்து விட்டது என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் ஜெயவர்மன் (17). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாணவர் ஜெயவர்மன், 600க்கு […]

இலங்கை

யாழில் சந்தேகத்துக்கிடமான வீடொன்று முற்றுகை – இரு பெண்கள் உட்பட்ட நால்வர் கைது

  • May 10, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்றை முற்றுகையிட்டு வீட்டு உரிமையாளர், இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த தலைமையிலான யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சில நாட்களாக குறித்த வீட்டில் அதிகளவு பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து போவதாக பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு அந்தப் பகுதி ஊர்மக்களினால் தகவல் வழங்கபட்டுள்ளது. […]

பொழுதுபோக்கு

இன்று அட்சய திருதியை; மறந்தும் கூட இந்த தவறை செய்யாதீங்க

  • May 10, 2024
  • 0 Comments

இந்து மதத்தில் அட்சய திருதியை மிகவும் மங்களகரமான நாளாகும். இந்த அட்சய திருதியை நாளில் என்ன செய்தாலும், என்ன வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது மே 10 ஆம் திகதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விநாயகர், லட்சுமி தேவி, குபேரர், விஷ்ணு ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளை செய்து மக்கள் வழிபடுவார்கள். இந்த நாளில் தான் குபேரர் சிவன் மற்றும் பிரம்மாவிடம் ஆசியை பெற்று, சொர்க்கத்தின் […]

ஐரோப்பா

ஒரு வழியாக பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டெழுந்த பிரித்தானியா : மக்களின் வாழ்க்கை தரம் உயருமா?

  • May 10, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரம் 0.6%  வளர்ச்சியடைந்ததால் இங்கிலாந்து மந்தநிலையிலிருந்து வெளியேறியுள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2023 இன் பிற்  பாதியில் நாடு இரண்டு காலாண்டு சரிவை சந்தித்தது. இது ஒரு தொழில்நுட்ப மந்தநிலையை பிரதிபலிக்கிறது. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஜனவரி மற்றும் மார்ச் இடையே 0.6% உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார வல்லுநர்கள் கணித்த 0.4% வளர்ச்சியை விட வேகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், […]

இலங்கை

ஐரோப்பிய நாடொன்றில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள்!

  • May 10, 2024
  • 0 Comments

ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்காக இலங்கையில் இருந்து  சட்டவிரோதமாக தப்பிச் சென்ற இரண்டு இலங்கையர்கள் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர். அங்கு போர்க்களத்தில் காயம்பட்ட உறுப்பினர்களை மீண்டும் போர்க்களத்துக்கு அனுப்பும் நிலை இருப்பதாக அவர்கள் இதன்போது வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்கள், எங்களுடைய பொருளாதார பிரச்சனையால், நாங்கள் அத்தகைய இடத்திற்குச் சென்றோம், எங்களுக்கு எதுவும் தெரியாது, நாங்கள் ஒரு காட்டின் நடுவில் விடப்பட்டுள்ளோம். இது போரை விட தற்கொலை. நாங்கள் உக்ரைன் வீரர்கள் […]

பொழுதுபோக்கு

ஹாட்ரிக் வெற்றியை தட்டுவாரா கவின்…? முழு விமர்சனம்

  • May 10, 2024
  • 0 Comments

இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. அதைத்தொடர்ந்து கவின் செய்த பிரமோஷனும் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. ட்ரெய்லரை பார்க்கும்போது படம் என்ன மாதிரியான கதை என்பது தெரிந்திருந்தது. அதன்படி சிறு வயதிலிருந்து நடிகனாகும் கனவில் இருக்கும் கவின் அதற்காக கடும் முயற்சி எடுக்கிறார். அவருக்கு பக்க பலமாக அப்பா லால் துணை நிற்கிறார். இந்த முயற்சிக்கு கிடையில் வாய்ப்பு கைகூடி வரும்போது கவினுக்கு […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • May 10, 2024
  • 0 Comments

மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.88 அமெரிக்க டொலராக நிலவுகிறது

error: Content is protected !!