தமிழ்நாடு

தமிழகத்தில் அதிர்ச்சி!! +2 தேர்வில் 494 மதிப்பெண்கள்… சோகத்தில் விபரீத முடிவெடுத்த மாணவன்

கம்பத்தில் 12ம் வகுப்பில் 494 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவன், மதிப்பெண் குறைந்து விட்டது என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் ஜெயவர்மன் (17). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாணவர் ஜெயவர்மன், 600க்கு 494 மதிப்பெண்களை எடுத்திருந்தார். தான் 500 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என நினைத்திருந்ததாகவும், ஆனால் 500க்கு மேல் வாங்க முடியவில்லை என ஜெயவர்மன், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இதனால் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாணவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில், மதியம் வரை அவரை காணவில்லை. இதனால் வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று பெற்றோர் தேடி உள்ளனர். அப்போது மூன்றாவது மாடியில் மாணவர் ஜெயவர்மன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவமனையில் கவலையுடன் திரண்டிருந்த ஜெயவர்மனின் உறவினர்கள், நண்பர்கள்

உடனடியாக இது தொடர்பாக கம்பம் காவல் நிலைய பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

500 மதிப்பெண்களுக்கு மேல் வரும் என எதிர்பார்க்கப்பட்ட 494 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், மாணவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content