தமிழரசுக்கட்சியில் தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகம் : எழுந்துள்ள சர்ச்சை- இரா.சாணக்கியன் அதிரடி
”இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு மட்டுமே பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகமே சட்ட ரீதியாக இயங்கும்” எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்று திருகோணமலையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பு இன்று களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில், ”தமிழரசுக்கட்சியின் மாநாட்டுக்கான ஆலோசனைக்கூட்டமாக தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது சுமந்திரன் அவர்களை உபதலைவராக நியமிக்குமாறு சிறிதரன் கோரியிருந்தார். எனினும் அதனை […]













