இலங்கையில் வெளிநாட்டு படப்பிடிப்பு – திடீரென நடந்த விபரீதம்
கொட்டகலை மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில் விசேட புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையக புகையிரத பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக கொடுக்கப்பட்ட ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
சிறப்பு அனுமதியின் கீழ், படப்பிடிப்பிற்காக ஜனவரி 24 முதல் 29 வரை இந்த 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களை ரயில்வே திணைக்களம் வழங்கியுள்ளது.
படப்பிடிப்புகளை முடித்துக் கொண்டு இன்று கொழும்பு திரும்பும் போதே ரயில் தடம் புரண்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)