குடிபோதையில் கைதி ஒருவர் செய்த காரியம்!! விசாரணைக்கு உத்தரவு
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் குடிபோதையில் கைதி ஒருவர் விடுத்த கொலை மிரட்டல் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் பணிப்புரையின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த கைதிக்கு மது அருந்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், பல்லேகலையில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை அதிகாரிகளை கைதி மிரட்டியுள்ளார். கைதி மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, தும்பர சிறைச்சாலையில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று […]













