இலங்கை

வவுனியா பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ..!

  • August 28, 2023
  • 0 Comments

இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி பணமோசடி செய்த நபரை மக்கள் பிடித்து கொடுத்தும், வவுனியா பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளதாக தெரிவித்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக பாதிக்கப்பட்டவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (28.08) மதியம் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்தியாவுக்கு பௌத்தர்களை யாத்திரையாக அழைத்து செல்வதாக தெரிவித்து வவுனியா மற்றும் மதவாச்சி ஆகிய பகுதிகளில் 20 இற்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்றுள்ளார். […]

ஆசியா

பாகிஸ்தானில் இடம்பெற்ற வீதி விபத்து; எழுவர் உயிரிழப்பு!

  • August 28, 2023
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் இடம்பெற்ற வீதி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மன்சேராவில் சிற்றுர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிற்றுர்ந்தின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என அந்நாட்டு காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு

இன்டர்வெலில் ஒளிபரப்பான சமந்தாவின் அந்த காட்சி.. உடனே வெளியேறிய நாகசைத்தன்யா

  • August 28, 2023
  • 0 Comments

குஷி படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் நாக சைத்தன்யா கடுப்பாகி எழும்பி சென்ற சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது. சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தெலுங்கு திரையுலகம் கொண்டாடும் ஜோடியாக வாழ்ந்து வந்த இவர்கள் பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, சட்டப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்தை பெற்றுவிட்டனர். விவாகரத்திற்கு பின் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா, அதில் இருந்து வெளிவர கோவில் கோவிலாக சென்றார். இதையடுத்து, படங்களில் மீது […]

செய்தி

அதிபர் கிம் மீது கொலை முயற்சி – அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு

  • August 28, 2023
  • 0 Comments

வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் மீது கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா அதிபர் கிம் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பினையும் மீறி அவ்வப்போது அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், பியாங்யாங் நகரில் சமீபத்தில் குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும், இது கிம்மை கொலைசெய்யும் முயற்சியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இதனையடுத்து கிம்முக்கான பாதுகாப்பு பலப்பட்டுள்ளதாகவும் இதற்காக வெளிநாட்டில் இருந்து நவீன சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் […]

இந்தியா

சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்திற்கு பெயர் வைப்பதில் சர்ச்சை? இஸ்ரோ தலைவர் விளக்கம்

நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கும் இடத்திற்கு ‘சிவசக்தி’ எனப் பெயர் சூட்டியதில் சர்ச்சை தேவையில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் சோமநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், சந்திரயான் -3 திட்டத்தில் இருந்து விண்வெளி நிறுவனம் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான தரவுகளைப் பெற்றுள்ளது, இது வரும் நாட்களில் விளக்கப்படும். செய்தியாளர்களிடம் பேசிய சோமநாத், சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்திற்கு ‘சிவ்சக்தி பாயிண்ட்’ என்று பிரதமர் பெயர் சூட்டியதில் எந்த சர்ச்சையும் […]

இலங்கை

பொரலுகந்த ரஜமகா விகாரை தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் (Photos)

  • August 28, 2023
  • 0 Comments

திருகோணமலை- இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்று வந்தநிலையில் இது தொடர்பாகவும் பேசப்பட்டது. குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிராக தமிழ் மக்களினால் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கிழக்கு மாகாண ஆளுநர் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

இயக்குனராக களமிறங்குகின்றார் விஜய்யின் மகன் : லைகா வெளியிட்ட உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

  • August 28, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது ‛லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க போகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாடுகளில் சினிமா தொடர்பான படிப்பை படித்தவர். ஏற்கனவே குறும்படங்கள் சில இயக்கி உள்ளார். தனது தந்தையுடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் ஆடி உள்ளார். தாத்தா, அப்பாவை போல் இவருக்கும் சினிமா மீது தான் ஆர்வம். அப்பா விஜய்யை போல் ஹீரோவாக களமிறங்காமல் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல் இயக்குனராக […]

இலங்கை

ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

  • August 28, 2023
  • 0 Comments

ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. மக்கள் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இழக்க நேரிடும் என்பதால் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தெளிவுபடுத்தல் தேவைப்பட்டால், அந்த பிரச்சினைகளை cbslgen@cbsl.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், சில மோசடியாளர்கள் தமது விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தும் விதம் குறித்து மத்திய வங்கி […]

வட அமெரிக்கா

சடலமாக கண்டெடுக்கப்பட்ட தந்தையும் குழந்தைகளும்: கனடாவில் அதிரவைத்த சம்பவம்

  • August 28, 2023
  • 0 Comments

கனடாவின் கியூபெக் மாகாணத்தில், ஒரு தந்தையும் அவரது பிள்ளைகளான இரட்டைக் குழந்தைகளும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக் மாகாணத்திலுள்ள Lanaudière என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிஸார், அங்கு ஒரு ஆணும், இரண்டு குழந்தைகளும் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர். அந்த நபரின் பெயர் Ianik Lamontagne (46) என்றும், அந்தப் பிள்ளைகளுடைய பெயர்கள் Antoine மற்றும் Tristan என்றும் தெரியவந்துள்ளது.3 வயதான அந்தக் குழந்தைகள் இருவரும் இரட்டையர்கள் ஆவர். Ianik, […]

இலங்கை

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (ஆகஸ்ட் 28) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 96 சதமாக பதிவாகியுள்ளது.விற்பனை பெறுமதி 329 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளது. வளைகுடா நாணயங்களுக்கு எதிராக பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

error: Content is protected !!