பொழுதுபோக்கு

மின்சாரம் தாக்கி ரசிகர் பலி.. குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் நடிகர் சூர்யா

  • July 24, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யா நேற்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சூர்யாவின் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. தமிழகத்தில் சூர்யாவின் பிறந்தநாளை கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழகத்தை போல மற்ற மாநிலங்களிலும் சூர்யாவிற்கு ரசிகர்கள் உள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்தநாளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மோபுரிவாரி பாலம் என்ற கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும், பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த லே பங்ளூரை […]

ஆசியா முக்கிய செய்திகள்

மலேசியாவில் முதலையொன்றின் வயிற்றில் மீட்கப்பட்ட நபரின் சடலம்

  • July 24, 2023
  • 0 Comments

மலேசியாவில் முதலையொன்றின் வயிற்றிலிருந்து நபர் ஒரு சடலமாக மீட்கப்பட்டார். சபா மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 60 வயது மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அட்டி பங்ஸா (Addi Bangsa) எனும் அந்த மீனவரை வலவிலங்குத் துறை கடந்த சில நாள்களாகத் தேடி வந்தது. தேடல் பணிகளின் 4ஆம் நாளில் அட்டியை விழுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட முதலையொன்றை அதிகாரிகள் அவதானித்துளள்னர். அதனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று வயிற்றைக் கிழித்ததில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அது காணாமல் போன மீனவரின் சடலம் […]

பொழுதுபோக்கு

மகனுடன் கொஞ்சி விளையாடும் நயன்… போட்டோ வெளியிட்டார் சிவன்

  • July 24, 2023
  • 0 Comments

தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. தன் நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை […]

அறிந்திருக்க வேண்டியவை

செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா? அறிந்திருக்க வேண்டியவை

  • July 24, 2023
  • 0 Comments

வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்போர் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. அக்கறையுடன் வளர்ப்பதும், அவற்றிக்கென்றே நேரம் செலவிடவேண்டுவதும் முக்கியம். வெளிநாட்டு நாய், அல்லது சாதாரண வகை என்றாலும் அவற்றின் வளர்ப்பு முறை அறிந்து வளர்க்கவேண்டும். ஆர்வமாக வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்போருக்கு பயனுள்ள டிப்ஸ் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம். பராமரிக்கும் முறைகள்: செல்ல பிராணிகளை நல்ல சோப்பு கொண்டு கழுவவேண்டும், அதற்கென்றே தனி மேட் மற்றும் துண்டு, பயன்படுத்தவேண்டும். அடிக்கடி அந்த மேட், துண்டை […]

இலங்கை

கொழும்பில் அடுக்குமாடியில் இருந்து தவறி விழுந்து வர்த்தகர் பரிதாபமாக பலி

  • July 24, 2023
  • 0 Comments

கருவாதோட்டம் ரொஸ்மீட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து வர்த்தகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த வர்த்தகர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு -5 பகுதியைச் சேர்ந்த 47 வயதானவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதே பரிசோதனையின் பின்னர் இந்த சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி பொருளியல் ஆய்வு நிறுவனமான ப்ரொன்டயர் ரிசர்ச் நிறுவனத்தின் ஸ்தாபகராகவும், பிரதம […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

உக்ரைனின் பாரம்பரிய தேவாலயத்தை தாக்கி அழித்த ரஷ்யா

  • July 24, 2023
  • 0 Comments

உக்ரைன் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்ய அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் சுமார் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 19 பேர் காயமடைந்துள்ளனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயம் ஒன்றும் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார். முக்கிய தானிய ஒப்பந்தம் ஒன்றில் இருந்து விலகியதிலிருந்து மொஸ்கோ ஒடேசா மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

ரஷ்யாவில உருகும் நிலத்தடி பனி – மிகப்பெரிய பள்ளத்தால் ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி

  • July 24, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் நிலத்தடியில் உறைந்திருக்கும் பனி உருகி ஒரு மாபெரும் பள்ளம் உருவாகியுள்ளதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளது. உலகளவில் உறைந்த நிலத்தடி மண்ணில் காணப்படும் மிகப்பெரிய பள்ளம் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ளதெனவும் அந்த பெரும்பள்ளத்தின் ஆழம் சுமார் ஒரு கிலோமீட்டர் எனவும் குறிப்பிடப்படுகின்றது. பூமியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அந்த உறைந்த நிலத்தடி மண் தொடர்ந்து உருகுகிறது. இது எதிர்வரும் ஆபத்துக்கான அறிகுறி என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். 1960ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டபோது இந்தப் பெரும்பள்ளம் முதலில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் மக்களில் இலங்கையர்கள் முதலிடம்!

  • July 24, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் மக்களில் இலங்கையர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் அகதிகள் பேரவை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. விக்டோரியா மாநிலத்தில் பிரிட்ஜிங் விசா E (BVE) விசாவில் உள்ளவர்களில், இலங்கையர்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர் மற்றும் எண்ணிக்கை 1,416 ஆகும். ஈரான் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், பிரிட்ஜிங் விசா E (BVE) இல் இலங்கையர்கள் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளனர், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Gmail கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • July 24, 2023
  • 0 Comments

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடில்லாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகளை நிரந்தரமாக டெலிட் செய்யும் முடிவை கூகுள் எடுத்துள்ளது. உங்களில் யாரேனும் உங்கள் பழைய ஜிமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல் இருந்தால், அதை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 21ம் நூற்றாண்டின் ஓர் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால் நம்மிடம் பேங்க் அக்கவுண்ட் இருக்கிறதோ இல்லையோ, கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் அக்கவுண்ட் அனைவரிடமும் இருக்கிறது. ஏனென்றால் பொதுவாகவே கூகுள் கொடுக்கும் அனைத்து சேவைகளும் இலவசமாக […]

இலங்கை

யாழில் கடற்கரையில் சிக்கிய பெருந்தொகை ஆயுதங்கள்!

  • July 24, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதி கடற்கரையில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் பருத்தி துறைப் பொலிசாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது. குடத்தனை வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பொது காணி ஒன்றில் இருந்தே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் நீல நிற பிளாஸ்டிக் எண்ணெய் பரல் ஒன்றில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது மீட்கப்பட்ட வெடி பொருட்கள் […]

error: Content is protected !!