ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • July 28, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் மேம்பட்ட பாதுகாப்புத் தரநிலைகள் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பின் இரண்டாவது அறிக்கை புதன்கிழமை காலை வெளியானது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு கோரி மற்றொரு குழு கையொப்பமிட்ட வேறொரு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டது. “Lorry rides, Save Workers Lives – Ban Them Immediately” என்ற தலைப்பிலான அந்த கடிதம், சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் உள்ளிட்ட 53 […]

இலங்கை

2022 (T20) கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற முறைக்கேடுகள் அம்பலமாகின!

  • July 28, 2023
  • 0 Comments

2022 T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிகெட் சபை முறைக்கேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அது குறித்து கணக்காய்வு அறிக்கையின் வரைவு வெளியாகியுள்ளது. கணக்காய்வு அறிக்கையின்படி இடம்பெற்ற முறைக்கேடுகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. 1. விளையாட்டு அமைச்சின் அனுமதியின்றி ஊடகவியலாளர்கள் உட்பட ஆறு பேருக்கு உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண அனுசரணை வழங்குதல். 2. ஊடகவியலாளர்களின் விமானப் பயணச்சீட்டு உட்பட அனைத்துச் செலவுகளுக்காகவும் 55 இலட்சம் ரூபாவுக்கு மேல் எவ்வித நிறுவன உடன்படிக்கையும்  இன்றிச் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 18 வயதை எட்டியவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • July 28, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பாரம்பரிய கலைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 18 வயதை எட்டும் அனைவருக்கும் கலாசார பாஸ் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இளைஞர்கள் நேரடியாக கலை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அழிவின் விளிம்பில் உள்ள கலைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது 200 யூரோ மதிப்பிலான கலாசார பாஸ், 18 வயதை எட்டிய 7.5 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, […]

விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட போட்டியில் விளையாட இலங்கை அணிக்கு அனுமதி!

  • July 28, 2023
  • 0 Comments

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர்பிலான ஆசிய பிராந்தியத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாட இலங்கை உதைபந்தாட்ட அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. FIFA உலகக் கோப்பை தகுதிச் சுற்றுகள் 2023 அக்டோபர் 12 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்னதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்

  • July 28, 2023
  • 0 Comments

பிரான்ஸில் குழந்தையை துண்டுகளாக வெட்டிக் கொன்ற தாய் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 93 ஆம் மாவட்டத்தின் Stains நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய பெண் ஒருவர் அப்பகுதி காவல்துறையினரால் ஞாயிற்றுக்கிழமை பகல் கைது செய்யப்பட்டர். பிறந்து இரண்டு நாட்கள் ஆன அவரது குழந்தையை இரண்டு துண்டுகளாக வெட்டி பொதி செய்து, பையில் போட்டு அவரது அறையில் வைத்துள்ளர். அப்பெண்ணின் நண்பர்கள் முதலில் இதனைக் கண்டறிந்து பொலிஸாரிடம் தகவல் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விரைந்து வந்த […]

இலங்கை

இலங்கையில் மக்கள் போராட்டத்திலும் ஊழல்………!

  • July 28, 2023
  • 0 Comments

மக்களின் உண்மையான போராட்டத்திலும், ஊழல் நடைபெற்றுள்ளதாக அரகலய போராட்டத்தின் செயற்பாட்டாளர் அனில் சாந்த விசனம் வெளியிட்டுள்ளார். ஜே.வி.பி மற்றும் இரண்டு முன்னணி கும்பல்களின் ஊழல்களினால், போராட்டத்தின் மூலம் பெற வேண்டிய சில வெற்றிகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று  (27.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டு […]

இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல எந்த தவறும் செய்யவில்லை!

  • July 28, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவரின் சரியான தன்மைக்காக கட்சி அவர் பக்கம் நிற்கிறது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க கட்சியாக செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் […]

இலங்கை

இலங்கையில் மரணச்சடங்கில் பங்கேற்றவருக்கு வீடு திரும்பும் போது காத்திருந்த அதிர்ச்சி

  • July 28, 2023
  • 0 Comments

கேகாலை தேவாலகம பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரிதொரு நபரால் தாக்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் மரணச்சடங்கொன்றிற்காக சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆப்பிரிக்கா செய்தி

நைஜர் நாட்டை கைப்பற்றியது இராணுவம்

  • July 27, 2023
  • 0 Comments

நைஜர் அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு முற்றாக சீல் வைக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. நைஜர் நாட்டின் கர்னல் மேஜர் அமடு அப்த்ரமனே உட்பட 9 இராணுவத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றி, ஜனாதிபதி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்ததாக அறிவித்தது. மறு அறிவித்தல் வரை எல்லைகள் மூடப்பட்டு ஊரடங்குச் சட்டம் […]

உலகம் செய்தி

புவி வெப்பமடைதலால் சீனாவில் வெப்பநிலை 50 மடங்கு உயர்வு

  • July 27, 2023
  • 0 Comments

அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு, தொழில்துறைக்கு முந்தைய அளவுகோலை விட, உலகளாவிய வெப்பநிலை தற்காலிகமாக 1.5C உயரும் என்று WMO கணித்துள்ளது. எவ்வாறாயினும், இது நீண்டகால வெப்பமயமாதலைக் குறிக்கும் பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1.5C வரம்பின் நிரந்தர மீறலைக் குறிக்காது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இவ்வளவு நாட்கள் 1.5C ஐ தாண்டிய ஒரு மாதம் இருந்ததில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் வடக்கு அரைக்கோளம் முழுவதும் வெப்பநிலை பதிவுகள் வீழ்ச்சியடைந்துள்ளன, பல பகுதிகள் பல வாரங்களாகத் […]

error: Content is protected !!