நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு; யாழ். மக்கள் போராட்டம்
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சில பிரதேச செயலகங்கள் கூடிய மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்தனர். குறிப்பாக இன்று (26) கோப்பாய் பிரதேச செயலகம் முன்பாக கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், […]













