செய்தி தமிழ்நாடு

போலீசாரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே மூடப்பட்ட நிலையில் ஏசிஎல் தனியார் தொழிற்சாலையில் பழைய இரும்புகளை திருடுவதற்காக வந்த சிலர் தொழிற்சாலையில் காவல் பணியில் ஈடுபட்டு வந்த வழுதலம் பேடு கிராமத்தைச் சேர்ந்த முத்து (வயது 56) என்பவரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து காவலர் முத்து அளித்த புகாரின் அடிப்படையில் பெத்திகுப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது தொழிற்சாலை காவலரை தாக்கிய இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராபின்சன் (வயது 36) என்பவரை கைது செய்ய முயற்சித்தபோது அவர் கையில் இருந்த பீர் பாட்டலை உடைத்து போலீசாரை பாட்டிலால் குத்த முயன்றார்.

இந்நிலையில் அங்கிருந்து தப்பிய ராபின்சன் என்பவரை சிப்காட் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி