இந்தியா செய்தி

பிரதமர் மோடியையும் குறிவைக்கிறது கரப்பான்பூச்சி கட்சி

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகத் தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எவரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகத் தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எவரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிரதமரின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்துள்ள சிஜேபி அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும், “சர்வாதிகார அரசாங்கம் வெளியேறுவது தவிர்க்க முடியாதது; கேள்விகளுக்கு இனி இடமில்லை” என்றும் அவ் அமைப்பு காட்டமாகத் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் பிரதமரின் முடிவைப் பாராட்டியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இளைஞர்களின் நலனும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலமும் மோடி அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். குற்றவாளிகளுக்கு எதிரான இந்த முக்கிய நடவடிக்கை ஒரு மைல்கல்லாக அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி வந்த சிஜேபி, தற்போது பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும் எனப் போராட்ட தீவிரத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி