ஜுன் மாத வெப்ப அலை – ஐரோப்பிய நாடுகளில் 10000 பேர் உயிரிழப்பு
ஜுன் மாதத்தில் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய கடுமையான வெப்ப அலை காரணமாக சுமார் 10000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஆதரவு பெற்ற யூரோமோமோ (EuroMOMO) என்ற வலையமைப்பு வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமையாக இந்த வெப்ப அலையில் சிக்கி பெரும்பாலும் 65 வயதுக்கு மேற்பட்ட சுமார் 9000 முதியவர்கள் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம், வெப்ப பக்கவாதத்தை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லது இருதய மற்றும் சுவாச நோய்களை மோசமாக்குவதன் மூலமோ மரணத்தை ஏற்படுத்தக்கூடும், இதில் வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.
27 ஐரோப்பிய நாடுகளின் தேசிய இறப்பு புள்ளிவிவரங்களிலிருந்து இந்த தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.




