உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் – அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாரான புட்டின்
உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ( Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
ரஷ்ய உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ரஷ்யா அமைதி பேச்சுவார்ததைக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய இஸ்தான்புல்லில் முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடர வேண்டும் என்றும், அந்த ஒப்பந்தங்களை உக்ரைனிய தூதுக்குழு ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனின் தொடர்சியான தாக்குதல்களால் ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ச்சியான தாக்குதல்கள் உக்ரைனின் தாக்குதல்கள், “சமூகத்தை நிலைகுலையச் செய்யும்” நோக்கத்தைக் கொண்டவை எனவும் புட்டின் விமர்சித்துள்ளார்.





